
சென்னை, ஜூன் 13, 2023: இந்தியாவின் முன்னணி NBFCக்களில் ஒன்றான முத்தூட்டு மினி ஃபைனான்சியர்ஸ், நிதியாண்டு 2022-23 க்கான நிதி முடிவுகளை அறிவித்தது, இதில் வருவாய் வளர்ச்சி, இலாப வரம்புகள் மற்றும் சொத்து தரம் உட்பட அனைத்து முக்கிய அளவீடுகளிலும் வலுவான நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம், நிதியாண்டு 22-23 இல் 30.58% என்ற ஒரு வலுவான இரட்டை இலக்க ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்யும் நாட்டிலுள்ள சில NBFCக்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் நிதியாண்டு 19-20 இலிருந்து ஒரு நிலையான அதிகரிப்பு, அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் 135% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ரூ. 81.77 கோடியாக இருந்தபோது, நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய இலாபமும் (PAT) 52% அதிகரித்துள்ளதன் மூலம், ரூ.544.44 கோடி இன் ஒரு மொத்த வருமானத்தை அடைந்தது. இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சொத்துக்கள் (AUM) 22-23 நிதியாண்டில் ரூ. 3,262.78 கோடியைத் தொட்டது, இது முந்தைய நிதியாண்டில் ஒப்பிடும்போது 2,498.60 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் சொத்துத் தரம் நிகர NPA, தொழில்துறையில் சிறந்த ஒன்றாக, 0.37% இல் வலுவாக இருந்தது.
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. மேத்யூ முத்தூட்டு கூறுகையில், “முத்தூட்டு மினி கடந்த நான்கு ஆண்டுகளில் எங்களின் அசைக்க முடியாத தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோளுக்கு ஏற்ப 135% இன் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருப்பதைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த காலகட்டத்தில், முத்தூட்டு மினி இன் கடன் மதிப்பீடுகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன, இது நிறுவனத்தின் வளர்ச்சியானது, அளவு மற்றும் தரம் வாய்ந்தது
என்பதைக் காட்டுகிறது. முக்கியமாக இந்த நிறுவனம் அமைத்த வலுவான அடித்தளத்தால் இந்த வளர்ச்சி சாத்தியமானதாக இருந்துவருகிறது. நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முத்தூட்டு மினியின் வெற்றியானது, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கவனம் ஆகியவற்றின் ஒரு சான்றாக இருக்கிறது. நாங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது, புதிய சந்தை வாய்ப்புகளைப் பெறுவதற்கும், எங்கள் வருவாய் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவதற்கும், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உயர்தர நிதிச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கும் எங்களின் திறனில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில், நிறுவனத்திற்கான இந்த வலுவான அடித்தளத்தை மேம்படுத்துவதன் மூலம் அதிவேக வளர்ச்சியைக் காண எதிர்பார்க்கிறோம்."என்று கூறினார்.
முத்தூட்டு மினி இன் தலைமை நிர்வாக அதிகாரி P E மத்தாய் மேலும் கூறுகையில், “இந்த நிதியாண்டின் வளர்ச்சி எண்கள், கணிசமான வளர்ச்சியை முன்னோக்கிப் பதிவு செய்வதற்கான எங்கள் திட்டங்களுடன் நன்றாக பிரதிபலிக்கின்றன. 23-24 நிதியாண்டில் 1,000 க்கும் அதிகமான கிளை இலக்கை அடைவதற்காக, நாடு முழுவதும் 130 க்கும் மேற்பட்ட புதிய கிளைகளைத் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக, ஒட்டுமொத்த AUM-ல் ரூ. 5,000 கோடியை அடைவதற்கான எங்கள் இலக்கை அடைய ஒரு கிளைக்கு ஒரு சராசரி ரூ. 5 கோடி இன் AUM ஐ நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த ஆண்டில், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு, ஒரு பொத்தானைத் தொடுதல் மூலம் கடன்களை திறம்பட நிர்வகிப்பதற்கான தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக அதன் ‘மை முத்தூட்டு ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டது உட்பட தனது டிஜிட்டல் சலுகைகளை தீவிரமாக மேம்படுத்தியது."என்று கூறினார்.
கடந்த ஆண்டின் காலப்போக்கில், முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் நிறுவனம் 53 புதிய கிளைகளைத் திறந்து, 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்ததன் மூலம் அதன் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. இதன் விளைவாக, நிறுவனத்தின் நெட்வொர்க், இப்போது பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, அதன் நிதிச் சேவைகளுக்கு அதிக அணுகலைச் செயல்படுத்த, ஒரு மொத்தமான 871 கிளைகளுடன் ஒரு விரிவான தடம் கொண்டுள்ளது.
முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் லிமிடெட் பற்றி:
முத்தூட்டு மினி ஃபைனான்சியர்ஸ் லிமிடெட் என்பது வங்கி அல்லாத நிதி நிறுவனமாக (NBFC), தொலைநோக்கு பார்வையாளரான திரு எம் மேத்யூ முத்தூட்டு அவர்களால் 1921 ஆம் ஆண்டில் சாமானியரின் நிதியாளராக நிறுவப்பட்டது. திரு எம். மேத்யூ முத்தூட்டு அவர்களால் ஒரு சாமானியரின் கனவை சரியான நேரத்தில் நிதியுதவியுடன் சக்தியூட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த வணிக அமைப்பானது, இன்று பெரிய NBFC ஆக (1998 இல் இணைக்கப்பட்டது) இந்தியா முழுவதும் 850 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் வளர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக பல பரிமாண வளர்ச்சியை அடையும் அதே வேளையில் இந்த நிறுவனம் அதன் பார்வைக்கு உண்மையாக இருந்து வருகிறது. தங்கக் கடன்களுக்கான எளிதான அணுகல் இந்த நிறுவனத்தின் முக்கிய வணிகத்தை உருவாக்குகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, கோவா, டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளாக நிறுவப்பட்ட பரந்த கிளை வலையமைப்பு, சாமானியர்களுக்கு தங்கக் கடன்களை எளிதாகக் கிடைக்கச் செய்துள்ளது. அதன் வாடிக்கையாளருக்கு அனைத்தையும் உள்ளடக்கிய அனுபவத்தை கிடைக்கச்செய்ய, இந்த நிறுவனம் செல்வ மேலாண்மை, பணப் பரிமாற்றம் (உள்நாட்டு மற்றும் சர்வதேசம்), ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துதல்கள், காப்பீடு, தங்க நாணயங்கள் மற்றும் நகைகளையும் வழங்குகிறது. மேலும் அறிய, தயவுசெய்து செல்க: https://www.muthoottumini.com/index.html.]
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.