சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்... தனியார் நிறுவனம் மாஸ் அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 22, 2021, 2:42 PM IST
Highlights

பென்ஸ் கார் வழங்க  நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அழித்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மனிதவள மேம்பாட்டு உயர் அதிகாரி வி.வி.அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் மிக சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவர் வி.வி.அப்பாராவ் கூறுகையில், ’’ஊழியர்களுக்கான சிறப்புப் பரிசு மற்றும் ஊக்கத் தொகை குறித்த முடிவுகளும், திட்டத்தையும் நிர்வாகத்தில் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் இதற்கு ஒப்புதல் அளிக்க நடைமுறைப்படுத்த அதிகளவிலான வாய்ப்பு உள்ளது. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2013ல் திறன் மிக்க 50 ஊழியர்களுக்கு பென்ஸ் காரை பரிசளித்தது. இதனால், ஒட்டுமொத்த இந்திய ஐடி நிறுவனங்களும் வியந்து போயின. கட்ந்த வாரம் நிர்வாக தலைவராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ரோஷினி நாடார் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் மீண்டும் ஊழியர்களுக்குப் பென்ஸ் கார் அளிக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

பொதுவாக நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் பதவியில் புதிய ஆட்களை நியமிக்கும் போது 15 முதல் 20 சதவீதம் தொகையைக் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டி வரும். உதாரணமாகத் தற்போது ஜாவா டெவலப்பர் தேவை என்றால் அதே சம்பளத்தில் ஊழியர்களை எடுக்க முடியும், அதுவே கிளவுட், பிக் டேட்டா போன்ற முக்கியத் தொழில்நுட்பத்தில் இதைச் செய்ய முடியாது.

அதேவேளை பணியாளர்களின் தட்டுப்பாட்டை போக்க ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 22,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் 15,600 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது.  பென்ஸ் கார் வழங்க  நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அழித்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மனிதவள மேம்பாட்டு உயர் அதிகாரி வி.வி.அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

click me!