ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணேஷ் ரமேஷ் வனபர்தி என்பவர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தெலுங்கானாவை சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த வாரம் 3 முறை கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் கணேஷ் ரமேஷ் வனபர்தி நவம்பர் 8ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த இளைஞர் முதலில் ரூ.20 கோடி கேட்டு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அந்தத் தொகையைத் தராவிட்டால் முகேஷ் அம்பானி கொல்லப்படுவார் என்று எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து அக்டோபர் 27 அன்று தொழிலதிபரின் பாதுகாப்புப் பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் மின்னஞ்சல் வந்த ஓரிரு நாட்களுக்குப் பிறகு ரூ.200 கோடி கேட்டு மற்றொரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதற்கும் பதில் இல்லாததால் ரூ.400 கோடி வேண்டும் என்று மூன்றாவது மிரட்டல் ஈமெயில் அனுப்பினார்.
அந்தமானில் 6 நாள் சுற்றுலா! ரயில்வேயின் சூப்பர் தீபாவளி சுற்றுலாத் திட்டம்.. செலவு ரொம்ப கம்மி!
போலீஸ் விசாரணையில் அந்த ஈமெயில் ஐடி ஷதாப் கான் என்ற நபருடையது என்பதும், பெல்ஜியத்தில் இருந்து அந்த மெயில்கள் வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் வெளிநாட்டில் இருந்து அனுப்பவது போல காட்டிக்கொள்ள VPN பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர்.
இந்த விசாரணையில் தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கணேஷ் ரமேஷ் வனபர்தி தான் மிரட்டல் ஈமெயில் அனுப்பினார் என்று தெரியவந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு இதுபோல, கொலை மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல.
அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்து போன் செய்த பீகாரைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். தெற்கு மும்பையில் உள்ள அம்பானி குடும்ப இல்லமான 'ஆன்டிலியா'வையும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையையும் வெடி வைத்துத் தகர்க்கப் போவதாகவும் அவர் மிரட்டி இருந்தார்.
தீபங்களின் திருவிழாவான தீபாவளியை கண்டு ரசிக்கணுமா.. இந்த 4 இந்திய நகரங்களை நோட் பண்ணிக்கோங்க..