தினமும் ரூ.5.6 கோடி நன்கொடை வழங்கும் பெரும்பணக்காரர் யார் தெரியுமா? தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

By Ramya sFirst Published Nov 3, 2023, 10:37 AM IST
Highlights

ஷிவ் நாடார் தனது தொண்டு பணிகளுக்காக பிரபலமாக அறியப்பட்டவர். அவர் நாட்டின் முன்னணி நன்கொடையாளர்களில் ஒருவராகவும் உள்ளார்

HCL நிறுவனத்தின் நிறுவனரான ஷிவ் நாடார், இந்தியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவருமாக இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஷிவ் நாடார், ஒரு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு வால்சந்த் குழுமத்தில் வேலை செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் முதலில் மைக்ரோகாம்ப் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் 1976-ல் ரூ.1,87,000 முதலீட்டில் HCL நிறுவனம் நிறுவப்பட்டது.

HCL நிறுவனர் ஷிவ் நாடார். சுமார் ரூ.2 லட்சம் கோடி (ஃபோர்ப்ஸ்) சொத்து மதிப்புடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். HCL  தற்போது சுமார் 11.8 பில்லியன் டாலர்கள் ஆண்டு வருமானம் கொண்ட நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 60 நாடுகளில் HCL நிறுவனத்தில் 222,000 பேர் பணிபுரிகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஷிவ் நாடார் தனது தொண்டு பணிகளுக்காக பிரபலமாக அறியப்பட்டவர். அவர் நாட்டின் முன்னணி நன்கொடையாளர்களில் ஒருவராகவும் உள்ளார். சமீபத்திய EdelGive Hurun இந்தியா தொண்டு பட்டியல் 2023-ல் HCL டெக்னாலஜிஸின் நிறுவனர்-தலைவரான ஷிவ் நாடார் அதிக நன்கொடை வழங்கும் தொழிலதிபர்களில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.5.6 கோடி நன்கொடையாக அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2023ஆம் நிதியாண்டில் மொத்தமாக ரூ.2,042 கோடி நன்கொடை அளித்துள்ளார். இது 2022-ம் ஆண்டில் அவர் நன்கொடை அளித்த தொகையை விட 76 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு சராசரியாக ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்த நிலையில் தற்போது அது ரூ.5.6 கோடியாக உயர்ந்துள்ளது.

1994 இல் நிறுவப்பட்ட ஷிவ் நாடார் அறக்கட்டளைக்கு ஷிவ் நாடார் தலைமை தாங்குகிறார், இது 'படைப்புத் தொண்டு' என்ற நெறிமுறையின் கீழ் செயல்படுகிறது. ஷிவ் நாடாரின் தொண்டு முயற்சிகள் முக்கியமாக கலை மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டுள்ளன. அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் SSN நிறுவனங்கள், வித்யா கியான், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், ஷிவ் நாடார் பள்ளி, ஷிக்ஷா முன்முயற்சி மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் ஆகியவை அடங்கும். இந்த அறக்கட்டளை அதன் பல்வேறு தாக்கமான முயற்சிகளுக்காக மொத்தம் 1.1 பில்லியன் டாலர்களை அர்ப்பணித்துள்ளது.

மேலும் அந்த பட்டியலின் படி, ஒட்டுமொத்தமாக, 119 இந்திய தொழிலதிபர்கள் 20230 நிதியாண்டில் ரூ. 5 கோடி அல்லது அதற்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர், ஒன்றாக இணைந்து ரூ.8,445 கோடியை தொண்டு நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளனர். விப்ரோ நிறுவனர் தலைவர் அசிம் பிரேம்ஜி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் ரூ.1,774 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார். இது 2022 நிதியாண்டை விட 267 சதவீதம் அதிகமாகும்.

EdelGive Hurun Philanthropy List 2023 பட்டியல் 2023 இல் உள்ள டாப் 10 தொழிலதிபர்கள், 2023ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 5,806 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர், இது 2022 இல் ரூ. 3,034 கோடி நன்கொடையாக இருந்தது. கடந்த ஆண்டு 6 பேர், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்த 2023 நிதியாண்டில் 14 இந்தியர்கள் 100 கோடிக்கும் மேல் நன்கொடை வழங்கி உள்ளனர். கடந்த ஆண்டு 12 பேர் இருந்த நிலையில், இந்த 24 இந்தியர்கள், 50 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், 47 பேர் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் நன்கொடை அளித்துள்ளனர்.

ஆகாஷ் அம்பானி முதல் ரோஷினி நாடார் வரை : கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசாக இருக்கும் பணக்கார பிள்ளைகள்..

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நிதியாண்டில் 376 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் தொண்டு முயற்சிகள் ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் அனுப்பப்படுகின்றன, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்துவதில் அவர்களின் தொண்டு முயற்சி கவனம் செலுத்துகிறது..

Zerodha நிறுவனத்டின் நிகில் காமத், பட்டியலில் உள்ள இளைய நன்கொடையாளாராக உருவெடுத்தார். 12வது இடத்தில் உள்ள காமத் சகோதரர்கள் இந்த ஆண்டில் ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளனர். பெண்கள் மத்தியில் ரோகினி நிலேகனி பிலான்த்ரோபீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரோகினி நிலேகனி ரூ.170 கோடி நன்கொடை அளித்ததாக பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. அவர் பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்தார். 

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்தம் ரூ.285 கோடி நன்கொடை அளித்துள்ளனர். அவர்களின் பரோபகார முயற்சிகள் அதானி அறக்கட்டளை மூலம் அனுப்பப்படுகின்றன, அங்கு அவர்களின் முதன்மை கவனம் கல்வித் துறையை மேம்படுத்துவதில் உள்ளது.

மக்களே அலெர்ட்.. நவம்பர் 1 முதல் இந்த விதிகள் எல்லாம் மாறப்போகுது.. முழு விபரம் இதோ !!

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.241 கோடி நன்கொடை அளித்துள்ளனர், இது கடந்த நிதியாண்டில் அவர் அளித்த பங்களிப்பை விட 46 சதவீதம் அதிகமாகும். அனில் அகர்வால் அறக்கட்டளையின் (AAF) ஒரு முக்கிய முயற்சி திட்டம் நந்த் கர் ஆகும். 2015 இல் தொடங்கப்பட்ட நந்த் கர், இந்தியாவில் உள்ள 13.7 லட்சம் அங்கன்வாடிகளில் உள்ள 7 கோடி குழந்தைகள் மற்றும் 2 கோடி பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது.

எந்த துறைக்கு அதிக நன்கொடை?

கல்வி நன்கொடைக்கு மிகவும் விருப்பமான காரணியாக உருவெடுத்தது, 62 பரோபகாரர்கள் ஒட்டுமொத்தமாக ரூ.1,547 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் ரூ.1,345 கோடியும், சுகாதாரத் துறையில் ரூ.633 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

click me!