வரும் 19 ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது மல்லையாவின் “கோவா சொகுசு பங்களா”........!!!

 
Published : Oct 13, 2016, 03:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
வரும் 19 ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது மல்லையாவின் “கோவா சொகுசு பங்களா”........!!!

சுருக்கம்

வரும் 19  ஆம்  தேதி  ஏலத்திற்கு  வருகிறது  மல்லையாவின் “கோவா சொகுசு பங்களா”........!!!

கிங்பிஃஷர் விஜய் மல்லையாவுக்கு  சொந்தமான    கோவாவில்  உள்ள  சொகுசு  பங்களா வருகிற 19 ம் தேதி ஏலத்திற்கு  வருகிறது

ஸ்டேட்  பேங்க் ஆஃப் உள்ளிட்ட வங்கிகளிடம் வாங்கி இருந்த ரூ. 9,000 கோடி கடனை திருப்பி கொடுக்காமல், தற்போது லண்டனில் உள்ளார்  விஜய் மல்லையா ...!

இதன்  தொடர்ச்சியாக, அவரது சொத்துக்களை  முடக்கும்  பணி  தொடங்கியது. இதில், மும்பையில் உள்ள கிங்பிஷர் அலுவலகம், மல்லையாவின் தனி விமானம் ஆகியவற்றை ஏலம் விடும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஏலம் எடுக்க ஒருவர் கூட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கோவாவில் உள்ள சொகுசு பங்களாவை ஏலம் விட வங்கிகள் முடிவுகள்  செய்துள்ளது .

பங்களாவின் விவரம் :

12,350 சதுர மீட்டர் பரப்பளவு   கொண்டது..

இதுவரை 5 ஓட்டல் நிறுவனங்கள்  மற்றும்  ஊடகத்துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த சொகுசு பங்களாவை பார்த்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது .

இந்த பங்களாவுக்கு ஆரம்ப விலையாக ரூ.85.29 கோடியாக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதே சமயத்தில்,   பங்களாவை ஏலத்தில் எடுக்க பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வருகிற 19  ஆம் தேதி  வரை  பொறுத்திருந்து  பார்க்கலாம்,,.......... விஜய் மல்லையாவின்  சொகுசு  பங்களாவிற்கு  கிடைத்த  வரவேற்பை .....!!! 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
8வது ஊதியக் கமிஷன்: ரயில்வே ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்