Mahzooz: மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்ற தமிழரின் பிரத்யேக பேட்டி

Published : Feb 05, 2022, 02:35 PM IST
Mahzooz: மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்ற தமிழரின் பிரத்யேக பேட்டி

சுருக்கம்

மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.  

மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

மஹசூஸ் டிராவின் இந்த வாரத்திற்கான போட்டியில் www.mahzooz.ae என்ற இணையதளத்தில் AED 35 செலுத்தி பதிவு செய்து போட்டியாளர்கள் விளையாடினர்.

இந்த வாரத்திற்கான மஹசூஸ் டிரா வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 5) அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு நடக்கிறது. வெற்றியாளர் AED 10,000,000 ஜெயிக்கலாம்.

கடந்த டிராவில் தமிழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜோதி குமார் என்பவர் பரிசு வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்துவரும் ஜோதி குமாருக்கு வயது 51. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பாக சிங்கப்பூரில் வசித்துவந்த ஜோதி குமார், அங்கு லோட்டோ லைவ் டிராவில் விளையாடியிருக்கிறார். அதே அனுபவத்தில் அமீரகத்தில் மஹசூஸ் லைவ் டிராவில் கலந்துகொண்டு பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் நடக்கும் இந்த மஹசூஸ் லைவ் டிரா பல பேருடைய வாழ்க்கையையே மாற்றியுள்ளது. அந்தவகையில், தமிழகத்தை சேர்ந்த அமீரகத்தில் வசிக்கும் ஜோதி குமாரும் பரிசு வென்றுள்ளார்.

மஹசூஸ் லைவ் டிரா வெற்றியாளரான ஜோதி குமார், ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மஹசூஸில் பரிசுத்தொகையை வென்றதாக அறிந்தபோது அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியடைந்தேன். என் குடும்பமும் மகிழ்ச்சியடைந்தது. இதை கடவுள் கொடுத்த பரிசாகத்தான் பார்க்கிறேன். இந்த வெற்றி பெற்ற தொகையை, எனக்கு தெரிந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவுவேன் என்றார் ஜோதி குமார்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!