பட்ஜெட்டில் முதலீட்டுச் செலவு அதிகரிப்பு: சிமெண்ட் தேவையை அதிகப்படுத்துமா?

Published : Feb 05, 2022, 02:11 PM IST
பட்ஜெட்டில் முதலீட்டுச் செலவு அதிகரிப்பு: சிமெண்ட் தேவையை அதிகப்படுத்துமா?

சுருக்கம்

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கேபெக்ஸ் எனப்படும் முதலீட்டுக்கான செலவு, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கேபெக்ஸ் எனப்படும் முதலீட்டுக்கான செலவு, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம்தேதி 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதில் எப்போதும்இல்லாதவகையில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும்வகையிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்வகையில் முதலீட்டுச் செலவுக்கு அதிக முக்கியத்துவம்அளிக்கப்பட்டு, ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட 35 % கூடுதலாக ஒதுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

கட்டமைப்பு வசதிகளான சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்போது, அதற்கு முக்கியத்தேவையான சிமெண்ட் பயன்பாடு அதிகரிக்கும். ஆதலால், ஏப்ரல் நிதியாண்டு பிறந்தபின் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் புத்தெழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்தியா ரேட்டிங் அன்ட் ரிசார்ச் கூறுகையில் “ 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் முதலீட்டுச் செலவைவிட 35 சதவீதம் கூடுதலாக அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதால், நிச்சயம் சிமெண்ட் தேவையை வரும் மாதங்களில் அதிகப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளையும் பரவலாக உருவாக்கும்.

நடப்புநிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக 53 சதவீதம் நிதிஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதால்,சிமெண்ட் தேவையில் மீட்சி எற்பட்டது. நகர்புறகட்டமைப்புகளும் அதிகரித்தன. நடப்பு நிதியாண்டில் ரூ.61900 கோடி இருக்கும் நிலையில் இது வரும் நிதியாண்டில் ரூ.63500 கோடியாக அதிகரிக்கும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 100 கதி சக்தி முனையங்களும் சரக்குப்போக்குவரத்துக்காக  உருவாக்கப்பட உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த சிமெண்ட் தேவையில் வீடுகட்டுவதற்கு மட்டும் 65 சதவீதம் இருக்கிறது. பட்ஜெட்டில் மத்திய அரசு உட்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம்  அளித்திருப்பதும், சலுகைவிலை வீடுகள் கட்ட 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க ரூ.48000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாலும், இனிமேல் சிமெண்ட் தேவை அதிகரிக்கும்.  

கடந்த சில ஆண்டுகளாக சிமெண்ட் உற்பத்தி துறையை சரிவடையாமல் வைத்திருப்பது கட்டுமானத்துறைதான். அதிலும் பெருந்தொற்று காலத்தில் தனிநபர்கள் வீடு கட்டும் பிரிவிலிருந்து சிமெண்ட் தேவை இருந்தது, சிமெண்ட் நிறுவனங்களை பெரும்பகுதி காத்தது” எனத் தெரிவித்துள்ளது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்