New Baleno 2022 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டீசர் வெளியீடு! விரைவில் இந்தியா வரும் புதிய பலேனோ

Published : Feb 05, 2022, 12:43 PM ISTUpdated : Feb 07, 2022, 12:41 PM IST
New Baleno 2022 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டீசர் வெளியீடு! விரைவில் இந்தியா வரும் புதிய பலேனோ

சுருக்கம்

மாருதி சுசுகி நிறுவனம்  புதிய பலேனோ மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. 

மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ ஹேட்ச்பேக் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. நாடு முழுக்க இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய மாடலுக்கான டீசரை மாருதி சுசுகி வெளியிட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி பலேனோ மாடலின் வெளிப்புறம், உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு முற்றிலும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. 

புதிய பலேனோ மாடலுக்கான உற்பத்தி ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் புதிய பலேனோ மாடலுக்கான உற்பத்தி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உற்பத்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

இந்திய சந்தையில் அறிமுகமானதும் புதிய மாருதி சுசுகி பலேனோ மாடல் ஹூண்டாய் i20, டாடா அல்ட்ரோஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பலேனோ மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் இந்த விற்பனையகங்களில் அதிகம் விற்பனையாகும் மாடல்கறளில் ஒன்றாக பலேனோ மாடல் இருக்கிறது.

2022 மாருதி பலேனோ மாடலின் வெளிப்புறம் மேம்பட்ட முன்புற தோற்றம், கூர்மையான ஹெட்லேம்ப், பிரமாண்ட கிரில், டுவீக் செய்யப்பட்ட பொனெட், ரி-ஸ்டைல் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், அகலமான ஏர் இன்லெட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், மேம்பட்ட ரியர் பம்ப்பர், சிறதாக இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்படுகிறது.

உபகரணங்களை பொருத்தவரை பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கணட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் வீல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Business Loan: தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்.! யாருக்கு கிடைக்கும்? தகுதி, ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்
Post Office: ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபீஸின் ஜாக்பாட் திட்டம்!