
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களிலும் இரண்டு ஏர்பேக் இருக்க வேண்டும் என்ற விதிமுறை ஜனவரி 2022 வாக்கில் அமலுக்கு வந்தது. அதற்கு முன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த மாருதி சுசுகி ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, ரெனால்ட் குவிட் மற்றும் மஹிந்திரா பொலிரோ போன்ற மாடல்களில் ஒற்றை ஏர்பேக் கொண்டிருந்தன.
தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மாடலில் சத்தமின்றி டூயல் ஏர்பேக் வசதியை வழங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய பொலிரோ மாடல் விலை ரூ. 8.85 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.86 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஏர்பேக் வழங்கியதோடு பொலிரோ மாடலின் உள்புறமும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் பயணர் சைடு டேஷ்போர்டு பகுதியில் பெரிய கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இது வழக்கமான டேஷ்போர்டு பேனலாக மாற்றப்பட்டு ஃபாக்ஸ் வுட் கார்னிஷ் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பொலிரோ மாடலின் டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாடல் தொடர்ந்து வைட், சில்வர் மற்றும் பிரவுன் என மூன்று வித நிறங்களில் மட்டுமே கிடைக்கிறது. பயணர் பகுதியில் ஏர்பேக் சேர்த்து இருப்பதை தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் ப்ளூடூத் வசதி கொண்ட மியூசிக் சிஸ்டம், AUX மற்றும் யு.எஸ்.பி. கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மேனுவல் ஏ.சி., கீலெஸ் எண்ட்ரி, பவர் ஸ்டீரிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு ABS, EBD, ரியர் பார்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர், 3 சிலிண்டர் டீசல் எம்ஹாக் 75 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 75 பி.ஹெச்.பி. திறன், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.