
நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் லிமிட்டட், நெஸ்ட்லே இந்தியா ஆகியவை தங்களின் தயாரிப்பு பொருட்களான தேயிலை, பால், நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்களின் விலையை 16சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.
நடுத்தர குடும்பங்கள்
இதனால் வழக்கமான பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் இதுபோன்ற உணவுப் பொருட்களுக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டி, பாக்கெட்டுக்கு சூடுவைக்கப்பட்டுள்ளது.
நூடுல்ஸ் விலை
நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் தயாரிக்கும் புகழ்பெற்ற பிராண்ட், குழந்தைகள் விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸ் விலை 9 % முதல் 16%வரை விலை உயர்ந்துள்ளது. 70 கிராம் எடை கொண்ட மசாலா நூடுல்ஸ்விலை ரூ.12க்கு விற்கப்பட்டது, ரூ.14ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
140கிராம் எடைகொண்ட நூடுல்ஸ் பாக்கெட்விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. 560கிராம் எடைகொண்ட பாக்கெட், விலை 9.64% விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 96ரூபாய் இருந்த இந்த பாக்கெட், ரூ.105ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது
பால்பவுடர் , காபி பவுடர்
மேகி நூடுல்ஸ் தவிர்த்து, நெஸ்ட்லே சார்பில் தயாரிக்கப்படும் பால்பவுடர், காபி தூள் ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தரமான முதல்தரக பால்பவுடர்விலை 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.75லிருந்து ரூ.78ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. காபி பவுடர் விலை 3 சதவீதத்திலிருந்து 7 % உயர்த்தப்பட்டுள்ளது. நெஸ்கபே காபி பவுடர் விலை 2.5% உயர்த்தப்பட்டு, 25 கிராம் பாக்கெட் விலை ரூ.78லிருந்து ரூ.80ஆக அதிகரி்க்கப்பட்டுள்ளது. நெஸ்கபே 50கிராம் காபி பவுடர்விலை ரூ.145லிருந்து ரூ.150ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேயிலை
இந்துஸ்தூன் யுனிலீவர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ப்ரூ காபி பவுடர் விலை 3 % முதல் 7%வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோல்டு காபி விலை 3% முதல் 4 சதவீதம் வரை அதிகரி்க்கப்பட்டுள்ளது. ப்ரூ இன்ஸ்டன்ட் விலை 3 முதல் 6.6% வரை உயர்ந்துள்ளது.
டாஜ்மஹால் தேயிலைத் தூள்விலை 5.8%விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர ப்ரூக் பாண்ட் நிறுவனப் பொருட்களின் விலையும் 1.5 % முதல் 14 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பணவீக்கம் உயர்வு
நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாகவே இந்தப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதியவிலை உயர்வு நேற்று முதல் அமலுக்குவந்துள்ளது.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட பணவீக்க புள்ளிவிவரத்தில் சில்லரைப் பணவீக்கம் 6.07% உயர்ந்துள்ளது. ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட சற்று அதிகரித்துள்ளதால் வட்டிவீதத்தில் மாற்றம் இருக்காது என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.