MIS Scheme | ஒரே ஒரு முதலீடு! மாதமாதம் ரூ.9,250 வருமானம் வரும்! உட்கார்ந்தே சாப்பிடலாம்!

By Dinesh TG  |  First Published Jul 27, 2024, 12:30 PM IST

வங்கிகளை விட அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் பல அதிக வட்டிவிகிதங்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் காணப்போவது MIS எனப்படும் மாதாந்திர வருமானத் திட்டம். இதில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால் போது. மாதாமாதம் ரூ.9250 ரூபாய் உங்கள் கணக்கிற்கு வரவு வைக்கப்படும். முழு தகவல் இதோ...
 


எதிர்காலத் தேவைக்கு இன்றை சிறபான முதலீடு ஒன்றே ஆகச் சிறந்த மூலதனம். மூதலீடு என்றவுடம் நாம் அனைவரும் தனியார் அல்லது அரசு வங்கிகளை நாடுகிறோம். ஆனால், வங்கிகளை விட அஞ்சல் அலுகவலக சேமிப்பு திட்டங்கள் பல உள்ளன. அவை, வங்கிகளை விட அதிக பாதுகாப்பானதாகவும், அதிக வட்டிவிகிதங்களை தரும் வகையிலும் உள்ளன.

MIS சேமிப்பு திட்டம்

இப்படியான பல திட்டங்களில் ஒன்றுதான், அஞ்சல் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் (MIS- மாதாந்திர வருமானத் திட்டம் 2024) இது ஒரு வைப்பு திட்டமாகும். இந்த திட்டமானது அனைத்து வகையான மக்களுக்கும், குறிப்பாக நடுத்தர மக்களுக்கு மிகவும் ஏற்றவகையில் பயனுள்ளதாக விளங்குகிறது. இதற்கு 7.4% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.

இரு வகை திட்டங்கள்

இந்த மாதாந்திர வருமான சேமிப்புத் திட்டத்தில் சிங்கிள் அக்கவுண்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் என 2 வகைகள் கணக்குகள் உள்ளன. ஜாயிண்ட் அக்கவுண்ட் வகையில் 3 பேர் வரை இணைய முடியும். கூடுதல் பலன்களும் உண்டு. சிங்கள் கணக்கு முறையில் குறிப்பிட்ட பலன்கள் மட்டுமே உண்டு.

Gold Rates: முடிச்சிட்டீங்க போங்க; ரூ.10 லட்சம் கோடி காலி; தங்கத்தின் கருப்பு நாள்; பட்ஜெட்டால் ஏற்பட்ட சோகம்!

ஜாயிண்ட் அக்கவுண்ட் அதாவது கூட்டுக்கணக்கு தொடங்கும் போது அதிகபட்சமாக 15 லட்ச ரூபாய் வரை முதலீடு (டெபாசிட்) செய்யலாம். சிங்கிள் அக்கவுண்டடில் அதிகபட்சம் 9 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இணைந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் இணைந்தோ அஞ்சல் அலுவகத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கலாம். தனிநபராகவும் கணக்கு தொடங்கலாம். முதலீடு செய்யப்பட்ட நாளிலிருந்து முதிர்வுக்காலம் வரை ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்தப்படும்.

Tap to resize

Latest Videos

undefined



ரூ.9,250 வருமானம்!

MIS திட்டத்தில், ஜாயிண்ட் அக்கவுண்டடில் அதிகபட்ச முதலீடன 15 லட்சத்தை டெப்பாசிட் செய்வதாகக்கொண்டால், 7.4 சதவீதம் வட்டி வீதிம் 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 9,250 ரூபாய் வட்டி வருமானமாக பெறலாம். அதுவே, தனிநபர் அக்கவுண்ட்டாக இருந்தால் அதிகபட்சமாக 9 லட்சம் மட்டுமே டெப்பாசிட் செய்ய முடியும். அதற்கும் 7.4% வட்டிவீதம் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5500 ரூபாய் வட்ட வருமானம் வரும்.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

MIS-ல் இணைவது எப்படி

இந்த MIS திட்டத்தில் நீங்களும் இணைய விரும்பினால், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று, POMIS பிஓஎம்ஐஎஸ் திட்டத்துக்கான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து இணையலாம். அதற்கு, ஆதார்கார்டு, பான்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்துச்செல்லுங்கள்.

click me!