lic share: பாதாளத்தில் எல்ஐசி பங்கு மதிப்பு: முதலீ்ட்டாளர்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு

Published : Jun 09, 2022, 03:16 PM IST
lic share: பாதாளத்தில் எல்ஐசி பங்கு மதிப்பு:  முதலீ்ட்டாளர்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு

சுருக்கம்

lic share :நாட்டில் அனைவருக்கும் காப்பீடு வசதிதரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு காப்பீடு இல்லாத நிலை இருக்கிறது. எல்ஐசி பங்குகளின் சந்தைமதிப்பு மடமடவெனச் சரிந்து வருகிறது.

நாட்டில் அனைவருக்கும் காப்பீடு வசதிதரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு காப்பீடு இல்லாத நிலை இருக்கிறது. எல்ஐசி பங்குகளின் சந்தைமதிப்பு மடமடவெனச் சரிந்து வருகிறது.

ரூ.6 லட்சம் கோடியாக இருந்த எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.59 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டதை எண்ணி முதலீட்டாளர்கள் கண்ணீர் விடுகிறார்கள். 

எல்ஐசி நிறுவனத்தின் 3.5சதவீத பங்குகளை மட்டும் சந்தையில் விற்பனை செய்து மத்திய ரூ.21ஆயிரம் கோடி திரட்டியது. பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்கள், எல்ஐசி ஊழியர்கள் என எல்ஐசி பங்குகளை வாங்கியோருக்கு தள்ளுபடி தரப்பட்டது.

எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்தது. சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு வங்கு ரூ.905 ஆகவும், பாலிசிதாரர்க்களுக்குரூ.889 விலையிலும் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதம், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது.இறுதியாக எல்ஐசி நிறுவனத்தின் 31.6 கோடி பங்குகளில் ஒரு பங்கு ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டபோது, 8 சதவீதம் குறைவாக ஒரு பங்கு ரூ.867க்கு விற்பனை செய்யப்பட்டது. எல்ஐசி  பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பங்குச்சந்தையில் ஒவ்வொரு நாள் வர்த்தகத்திலும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் அடிக்கி மேல் அடி வாங்கி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் மேலும் 2 சதவீதம் எல்ஐசி பங்கு விலை சரிந்து ரூ.723.70 கோடிக்கு விற்கப்படுகிறது. 

எல்ஐசி பங்கு நிர்ணய விலையான ரூ.949 என்ற விலையைவிட இப்போது சந்தையில் எல்ஐசி மதிப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது.
எல்ஐசி சந்தை மதிப்பு ரூ. 6லட்சம் கோடியாக இருந்தநிலையில் அது ரூ.4.59 லட்சமாகக்குறைந்துள்ளது. எல்ஐசியில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள டாப்10 நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரூ.18.67 லட்சம் கோடியுடன் முதலாவது இடத்திலும், டிசிஎஸ் ரூ.12.48 லட்சம் கோடியுடன் 2-வது இடத்திலும், ஹெச்டிஎப்சி வங்கி ரூ.7.61 லட்சம் கோடியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இன்போசிஸ் நிறுவனம் ரூ.6.32 லட்சம் கோடியுடனும், இந்துஸ்தீன் யுனிலீவர் லிமிடட் நிறுவனம் ரூ.5.17 லட்சம் கோடியுடனும், ஐசிஐசிஐ வங்கிமதிப்பு ரூ.5.06 லட்சம் கோடியுடனும் உள்ளன.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

58% டிஏ உயர்வு மட்டும் போதுமா? 8வது ஊதியக் குழுவுக்கு முன்பே வரப்போகும் குட் நியூஸ்
PF Withdrawal: UPI மூலம் பிஎஃப் பணம் எடுக்க வரம்பு என்ன? விதிகள் என்ன தெரியுமா..?