lic ipo listing date: lic listing date: பங்குச்சந்தையில் பட்டியலானது எல்ஐசி: பங்குகள் 9% தள்ளுபடியில் விற்பனை

By Pothy RajFirst Published May 17, 2022, 11:05 AM IST
Highlights

lic ipo listing date: lic listing date:  மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் இன்று பட்டியலிடப்பட்டன. இதில் பங்கின் உண்மையான விலையான ரூ.949விட 9.4 சதவீதம் குறைவாக ரூ.865க்கு விற்பனையானது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் இன்று பட்டியலிடப்பட்டன. இதில் பங்கின் உண்மையான விலையான ரூ.949விட 9.4 சதவீதம் குறைவாக ரூ.865க்கு விற்பனையானது.

பங்குச்சந்தையில் லிஸ்டிங்

நாடுமுழுவதும் உள்ள முதலீட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி பங்கு விற்பனை இன்று நடந்தது. மத்திய அ ரசு தன்னிடம் இருக்கும் 100 சதவீத எல்ஐசி பங்குகளில் 3.5 சதவீதத்தை மட்டும் விற்பனை செய்து ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிட்டது.

ஐபிஓ விற்பனை

இதன்படி கடந்த 2ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும், 4ம் தேதி முதல்9ம் தேதி வரை பொது முதலீட்டாளர்கள், சில்லரை முதலீட்டாளர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு பங்கு விற்பனை நடந்தது. பங்குகள் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டது. ஏற்ககுறைய 16ஆயிரம் கோடி பங்குகளுக்கு, 42ஆயிரம் கோடி விண்ணப்பங்கள் வந்திருந்தன அதாவது 2.95 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன.

பங்குகள் வாங்க விருப்பம் கோரியவர்களுக்கு கடந்த 12ம் தேதி பங்குகள் ஒதுக்கீடு முடிந்தது. ஒரு பங்கின் விலை ரூ.949ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எல்ஐசி பங்கு விற்பனை நடந்த போது கிரே மார்க்கெட்டில் ரூ.100 வித்தியாசத்தில் கைமாற்றப்பட்ட பங்குகள் விலை அடுத்த சில நாட்களில் 90 சதவீதம் விலை குறைந்தது. இதனால் முதலீட்டாளர்கள மத்தியில் கலக்கம் இருந்தது.

9 சதவீதம ்தள்ளுபடி

இருப்பினும்  வெற்றிகரமாக பங்குச்சந்தையில் எல்ஐசி பங்கு முறைப்படி இன்று காலை பட்டியலிடப்பட்டது. எல்ஐசி பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 9 சதவீதம் குறைவாக ஒரு பங்கு விலை ரூ.865க்கு விற்கப்பட்டது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் எல்ஐசி பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டநிலையில், ஒரு பங்கு விலை ரூ.872ஆக செட்டிலானது.

எல்ஐசி பங்குவிலை தள்ளுபடியில் பட்டிலிடப்பட்டிருப்பதால் பங்குகளை வாங்க முடியாதவர்கள் இனிமேல் இதில் முதலீடு செய்வார்கள். சில்லரை முதலீட்டாளர்கள், அந்நிய நிறுவன முதலீட்டாள்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். இதனால் பங்குச்சந்தையில் முதலீடு வரத் தொடங்கும் எனும் நோக்கில் பங்குவிலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தமாதிரியான விளைவுவரப்போகிறது என்பது வரும் நாட்களில் தெரியும்

எல்ஐசி நிறுவனம் சந்தையில் பட்டியலிடப்பட்டதையடுத்து, 5-வது மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது. அதிகபட்ச சந்தைமதிப்பில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.16.42 லட்சம் கோடியில் முதலீடத்திலும், அதைத்தொடர்ந்து, டிசிஎஸ், ஹெச்டிஎப்சி, இன்போசிஸ் ஆகியநிறுவனங்கள் உள்ளன
 

click me!