
கியா இந்தியா நிறுவனம் புதிய கேரன்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரூ. 8.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மிக குறைந்த விலையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய கேரன்ஸ் மாடலை வாங்க இதுவரை 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளதாக கியா இந்தியா தெரிவித்து உள்ளது.
இதுதவிர புக்கிங் செய்யப்பட்டதில் 50 சதவீதத்திற்கும் அதிக யூனிட்கள் டீசல் வேரியண்ட் என கியா இந்தியா தெரிவித்து இருக்கிறது. "இந்த பிரிவில் அதிக டீசல் என்ஜின் மாடல்கள் இல்லை. இதனால் டீசல் வேரியண்டிற்கு 50 சதவீதம் பேர் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்," என கியா இந்தியா துணை தலைவர் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் ஹர்தீப் சததிங் பார் தெரிவித்தார்.
புதிய கேரன்ஸ் மாடல் ஆனந்தபூரில் உள்ள கியா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட கிராஸ் மாடல் இந்திய விற்பனையை தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. புதிய கேரன்ஸ் மாடலில் ஸ்ப்லிட் ஸ்டைல் லைட்டிங் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட பம்ப்பர் மற்றும் பெரிய ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் கூர்மையான தோற்றம் கொண்டிருக்கும் கேரன்ஸ் மாடலில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், எல்.இ.டி. ஸ்ட்ரிப், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட டெயில்கேட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய கேரன்ஸ் மாடல் அளவில் 4540mm நீளமும், 1800mm அகலமும், 1700mm உயரமும், 2780mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. அதன்படி அளவில் இந்த கார் மாருதி சுசுகி எர்டிகா, XL6 மற்றும் ஹூண்டாய் அல்கசார் மாடல்களை விட நீளமானது ஆகும்.
இந்தியாவில் கியா கேரன்ஸ் மாடல் பிரீமியம், பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டி.ச.டி. மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.