
இந்தியப் பங்குச்சந்தையலிருந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்(FII) தொடர்ந்து 5-வது மாதமாக முதலீட்டை எடுத்து வருவது பங்குச்சந்தையை ஊசலாட்டத்தில் விட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை ரூ.18,856 கோடி முதலீட்டை அன்னியநிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதில் ஈக்விட்டிஸ்லிருந்து ரூ.15,342 கோடியும், பங்குப்பத்திரங்களில் இருந்து ரூ.3,629 கோடியும் இதுவரை திரும்பப்பெறப்பட்டுள்ளது.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 800 கோடி டாலர் அளவுக்கு இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து எப்பிஐ முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.கடந்த 2009-ம் ஆண்டுக்குப்பின் இதுதான் அதிகபட்சமாக எப்பிஐ முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இதுவரை ரூ.17500 கோடிவரை பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று முதலீட்டை எடுத்துள்ளனர்.
காரணம் என்ன?
இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்களும் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது ஒட்டுமொத்த பங்குச்சந்தையும் ஆட்டம்காணும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் குறையும். இதற்கு முக்கியக் காரணம் உலகநாடுகளில் ஏற்பட்ட பதற்றமான சூழலும், அமெரிக்க பெடரல் வங்கி கடனுக்கான வட்டியை எப்போதுவேண்டுமானும் உயர்த்தும் என்ற அறிவிப்புதான்.
இதனால்தான் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து 5-வது மாதமாக தங்கள் முதலீட்டைஇந்தியப் பங்குச்சந்தையிலிருந்து குறைந்த அளவு ஆதாயத்தைப் பார்த்துவிட்டு வெளியேறுகிறார்கள்.
குறிப்பாக மோர்கன் ஸ்டான்லி சந்தை நிறுவனம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்று தெரிவித்திருப்பது அன்னிய நிறுவன முதலீட்டாளர்களை மேலும் அச்சப்படுத்தி முதலீட்டை வேகமாக திரும்பப் பெற தூண்டுகோலாகஅமைகிறது. அதிலும் பெடரல் வங்கி வட்டி வீதத்தை கடுமையாக உயர்த்துவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பது முதலீட்டாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி இருந்து வருகிறது.
| மாதம் | எப்ஐஐ முதலீடு விலக்கல் |
| 2021-அக்டோபர் | ரூ.12,436 கோடி |
| 2021-நவம்பர் | ரூ.2,520 கோடி |
| 2021-டிசம்பர் | ரூ.2,702 கோடி |
| ஜனவரி-22 | ரூ.28,526 கோடி |
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றம் அதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சமும் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று, கச்சா எண்ணெய் மீதான பங்குகளுக்குமுதலீட்டை திருப்புகிறார்கள். சில முதலீட்டாளர்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கிறார்கள்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியப்பங்குச்சந்தையிலிருந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.12,436 கோடி திரும்பப்பெற்றனர். நவம்பர் மாதத்தில் ரூ.2,520 கோடியும், டிசம்பரில் ரூ.29,702 கோடியும், ஜனவரியில் ரூ.28ஆயிரத்து 526 கோடியும் திருமப் பெற்றுள்ளனர். பிப்ரவரி மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இதுவரை ரூ.18,856 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.