Jio Family Plan ஒரு ப்ளான்... 3 சிம்கள்... நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், 5ஜி டேட்டா..!

By Manikanda Prabu  |  First Published Apr 21, 2024, 3:08 PM IST

ஜியோ நிறுவனம், ஒரே திட்டத்தின் கீழ் பல்வேறு நன்மைகளை ஒரு குடும்பம் முழுவதுக்கும் வழங்கும் திட்டத்தை மலிவான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது


இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை மலிவான விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில், கூடுதல் பணம் செலவழிக்காமல் Netflix மற்றும் Amazon Prime போன்ற OTT சந்தாக்களைப் பயன்படுத்த விரும்பினால், ஜியோவின் family plan திட்டம் உங்களுக்கானதுதான். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது.

ஜியோ ரூ 699 family plan 

Latest Videos

undefined


நீங்கள் பணம் செலவழித்து Netflix மற்றும் Amazon Prime போன்ற OTT சந்தாக்களைப் பயன்படுத்தினால், ஜியோவின் family plan திட்டதுக்கு மாறினால், நீங்கள் இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை. ஜியோ family plan திட்டத்தில் அத்தகைய ஓடிடி சந்தாக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனுடன், இந்த திட்டத்தில் 3 நபர்களுக்கு கூடுதல் சிம், 5ஜி டேட்டா, வரம்பற்ற அழைப்பு போன்ற வசதிகளும் கிடைக்கும்.

ஐபோன் 15 பிளஸ் ஆஃபர்.. ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு.. வாங்குவது எப்படி?

ஜியோ நிறுவனம் ரூ. 699 திட்டத்தை போஸ்ட்பைட் திட்டமாக (Jio Postpaid Plan) அறிமுகம் செய்துள்ளது. ஜியோ ரூ.699 திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. அன்லிமிட்டெட்  அழைப்புகள், 100ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. இதனுடன், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தாவும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இது தவிர, ஜியோ ரூ. 699 பேமிலி பிளான் திட்டம் உங்களுக்கு 3 சிம் இணைப்புகளை (Jio SIM connections) வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு கூடுதலாக சிம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த 3 சிம் கார்டுகளையும் தலா ரூ.99 செலவில் இந்த ஒரே திட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ், அந்த 3 சிம் கார்டுகளுக்கும் முதன்மை சிம் கார்டுக்கு உள்ளது போன்று, SMS, unlimited voice calls, 5G data போன்ற வசதிகளும் இலவசமாக கிடைக்கும்.

மேலும்,  ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அது தீர்ந்துவிட்டால், ஒரு ஜிபிக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்படும்.

click me!