Google pay sachet loans ஜிபே மூலம் கடன் பெறுவது எப்படி?

By Manikanda Prabu  |  First Published Apr 21, 2024, 12:38 PM IST

கூகுள் நிறுவனம் தனது ஜி-பே செயலி மூலம் கடன் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்


சிறு வணிகர், நிறுவனங்களின் அன்றாட வணிகத் தேவைகளுக்கு சிறிய தொகைகள் தேவைப்படலாம். இதற்காக வங்கிகளுக்கு சென்று அந்த கடன்களை வாங்க முடியாது. எனவே, அவர்களது உடனடி வணிகத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கடன் வசதியை கூகுள் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) கட்டணம் செலுத்தும் முறை மிகவும் பிரபலமானது. இதில், கூகுள் நிறுவனத்தின் ஜி-பே முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில், ஜிபே மூலம் சிறு வணிகர்கள் கடன் பெறும் வகையில், சாச்செட் கடன்கள் (sachet loans) வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Latest Videos

undefined

எலான் மஸ்க் இந்திய வருகை தள்ளி வைப்பு: இதுதான் காரணம்!

சாச்செட் கடன்கள் என்பது, பொதுவாக ரூ.10,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான சிறிய கடன்களை பெற்றுக் கொள்ளவது ஆகும். அதனை 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தலாம். அதன்படி, கூகுள் பே சாச்செட் கடன்கள் மூலம் குறைந்த அளவில் ரூ.15,000 முதல் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை மாத இஎம்ஐயாக திரும்ப செலுத்தலாம்.

ஜிபே சாச்செட் கடன்கள் பெற தகுதிகள் என்ன?


ஜிபே சாச்செட் கடன்கள் பெற விரும்பும் பயனர்களுக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மொபைல் எண், ஆதார், பான்கார்டு போன்றவை கட்டாயம். விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் 750க்கும் குறைவாக இருக்கக் கூடாது.

எப்படி பெறுவது?


முதலில் Google Pay Business செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும். அதன்பின்னர் google Pay for Business செயலியின் கடன் பகுதிக்குச் சென்று offers என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையை உள்ளிட்டு தொடரவும். அடுத்து google pay வைத்துள்ள வங்கி தளத்திற்குச் சென்றதும் கேஒய்சி(KYC)) உட்பட சில விஷயங்களை பூர்த்தி செய்ததும் உங்களுக்கு கடன் கிடைத்து விடும்.

click me!