அட்டகாசம் செய்யும் ஜியோ...! ஐபோன் வாங்ககூட இப்படி ஒரு "ஜாக்பாட்டா"....? 

 
Published : Oct 28, 2017, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
அட்டகாசம் செய்யும் ஜியோ...! ஐபோன் வாங்ககூட இப்படி ஒரு "ஜாக்பாட்டா"....? 

சுருக்கம்

jio announced big offer to buy i phone x

அட்டகாசம் செய்யும் ஜியோ...! ஐபோன் வாங்ககூட இப்படி ஒரு ஜாக்பாட்டா....? 

ஜியோ என்றாலே சலுகை தாண்டா என்ற எண்ணம் தான் தற்போது மக்கள் மத்தியில் உள்ளது.

அந்த அளவிற்கு சலுகையை வாரி வாரி வழங்கி வருகிறது. இதற்கிடையில் மேலும் மேலும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  தற்போது  மேலும் ஒரு சூப்பர் அறிக்கையை வெளியிட்டுள்ளது ஜியோஅதன்படி, 

ஐபோன் X வாங்கினால், சிறப்பு பைபேக் (buyback ) சலுகை அளிக்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.

 jio phone  வாங்க முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவித்ததற்கு மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதன்படி இரண்டே நாட்களில் ஆறு மில்லியன் பேர் ஜயோ போனை பெறுவதற்காக முன்பதிவு செய்தனர்

இதனை தொடர்ந்து தற்போது, ஐபோன் X வாங்குவோருக்கு ஜியோ சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் ரூ.1,999 மட்டும் கொடுத்து முன்பதிவு செய்தால் போதும் 

எங்கு வாங்க வேண்டும் தெரியுமா ?

ரிலையன்ஸ் ரீடெயில், ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம், மை ஜியோ செயலி அல்லது அமேசான் வலைத்தளங்களில் முன்பதிவு செய்ய முடியும்.

சலுகை நாட்கள்..?

இந்த சலுகை செப்டம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

கால அவகாசம் : ஒரு வருடம் 

ஐபோன் X வாங்கி ஒரு வருடம் முடிந்த பின்னர், திரும்ப வழங்கும் போது, 70 சதவிகித பைபேக் (buyback ) பெற முடியும். இந்த பைபேக் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.799  க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் 

குறித்துக்கொள்ளுங்கள்

ஐபோன் X வாங்கும் போது மறக்காமல் My Jio ஆப்பை டவுன்லோடு செய்து,பதிவு செய்ய வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

 ஐபோன் வாங்க மிக ஆவலாக உள்ள வாடிக்கையாளர்கள் உடனே ஜியோ ஷோ ரூம் சென்று சந்தேகத்தை பூர்த்தி செய்துக்கொள்ளுங்கள்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

TN DHS Jobs 2026: கைநிறைய சம்பளத்துடன் உள்ளூரில் அரசு வேலை வேண்டுமா?! உடனே அப்ளை பண்ணுங்க.!
Business: தொழில் தொடங்கும் பெண்களுக்கு ஜாக்பாட்.! ரூ.2 லட்சம் மானியத்துடன் சுளையா ரூ. 10 லட்சம் கடனுதவி.!