ippb recruitment: இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மெகா வேலைவாய்ப்பு: 650 ஜிடிஎஸ் அதிகாரி பணி காலியிடம்

By Pothy RajFirst Published May 12, 2022, 11:19 AM IST
Highlights

ippb recruitment :இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி(IPPB) சார்பில் கிராமின் தக் சதக் அதிகாரி பதவிக்கான 650 காலியிடங்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி(IPPB) சார்பில் கிராமின் தக் சதக் அதிகாரி பதவிக்கான 650 காலியிடங்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

மத்திய தகவல்தொடர்புத்துறையின் கீழ் வரும் இந்திய அஞ்சல் துறையின் பேமெண்ட் வங்கியில் நாடுமுழுவதும் கிராமின் தக் சேவக் பதவிக்கு 650 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அனைவரும் www.ippbonline.com.  என்ற இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 20ம் தேதி கடைசித் தேதியாகும். கடந்த 10-ம் தேதி முதல் விண்ணப்பங்களை அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்,வேறு எந்த வழியி்லும் விண்ணப்பத்தை அனுப்பினாலும் அது நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய அஞ்சல் மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி இடையே வர்த்தக ஏற்பாடுகள் செய்தல், ஒருங்கிணைத்தல், நேரடி விற்பனை உள்ளிட்ட பணிகளை கிராமின் தக் சேவக் அதிகாரிகள் செய்ய வேண்டும். 

முக்கிய அம்சங்கள்

  • இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் ஜிடிஎஸ் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்ப மே 20 கடைசித்தேதியாகும்
  • கடந்த 10ம் தேதி முதல் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பும்போது கட்டணங்களைச் செலுத்தலாம். 
  • ஜிடிஎஸ் பணிக்கு வரும் ஜூன் மாதம் ஆன்-லைனில் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடக்கும் தேதி அழைப்பு கடிதம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்
  • ஜிடிஎஸ் பணிக்கு விண்ணப்பங்களை வெற்றிகரமாக அனுப்பிய பின், அடுத்த 7 முதல் 10 நாட்களில் அட்மிட் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


 

தகுதி

ஜிடிஎஸ் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்போர் மத்திய அரசால் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழக்கத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

ஜிடிஎஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஆன்-லைன் மூலமே தேர்வு நடத்தப்படும். விண்ணப்பம் செய்பவர்களுக்கு மொழித்திறன், புலமை தேர்வு வைக்கப்படும்.

வயது வரம்பு:

ஜிடிஎஸ் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு 2022 ஏப்ரல் 30ம் தேதியுடன் 20வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:
ஜிடிஎஸ் அதிகாரியாக வருவோருக்கு மாதம் தொடக்க ஊதியமாக ரூ.30ஆயிரம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணபிக்க வரும் 20ம் தேதி கடைசித் தேதியாகும். 

click me!