infosys share price: இன்போசிஸுக்கு ரூ.48ஆயிரம் கோடி இழப்பு; பங்குகள் 9% வீழ்ச்சி: 2 ஆண்டுகளில் இல்லாத சரிவு

By Pothy RajFirst Published Apr 18, 2022, 11:29 AM IST
Highlights

infosys share price :இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தில் 9 சதவீதம் சரிந்தது அதாவது ரூ.1,592 க்கு கீழிறங்கியது. இதனால் இன்போசிஸ் நிறுவனத்துக்கு ரூ.48ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தில் 9 சதவீதம் சரிந்தது அதாவது ரூ.1,592 க்கு கீழிறங்கியது. இதனால் இன்போசிஸ் நிறுவனத்துக்கு ரூ.48ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாகின. இதில் நிகர லாபம் கடுமையாகச் சரிந்தது இதன் விளைவாக இன்று வர்த்தகம் தொடங்கியதிலிருந்து இன்போசிஸ்பங்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது

2 ஆண்டுகளில் இல்லாத சரிவு

இந்த சரிவு இன்போசிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். கடந்த 2020, மார்ச் 23ம் தேதி கடைசியாக 12 சதவீதம் இன்போசிஸ் பங்குகள் சரிந்திருந்தன. 

இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் மாத காலாண்டு முடிவுகள் நேற்று வெளியாகின அதில் இன்போசிஸ் வங்கியின் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து, ரூ.5,686 கோடியாகவும்,வருவாய் ரூ.32,276 கோடியாகவும் இருக்கிறது. 2021ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டு முடிவில், இன்போசிஸ் நிகர லாபம் ரூ.5,076 கோடியாகவும், வருவாய் ரூ.26,311 கோடியாகவும் இருந்தது. 2021, டிசம்பர் மாதத்தோடு முடிந்த காலிறுதியில் நிகர லாபம் ரூ.5,809 கோடியாகவும், வருவாய், ரூ.31,867 கோடியாகவும் இருந்தது

48ஆயிரம் கோடி நஷ்டம்

இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் மாதம் முடந்த 4-வது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த நிறைவைத் தரவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் காலைமுதல் இன்போசிஸ் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் இன்போசிஸ் பங்குகள் 9 சதவீதம் சரிந்து சொத்துமதிப்பு ரூ.6.92 லட்சம் கோடியாகக் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.48ஆயிரம் கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது.நிப்டியில் இன்போசிஸ் பங்குகள் 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.

ஜியோஜித் நிதிச்சேவையின் தலைமை முதலீட்டு ஆய்வாளர் வி.கே.விஜயகுமார் கூறுகையில் “ இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்தது, வளர்ச்சி எதிர்காலத்தில் சிறப்பாக இருந்தாலும்காலாண்டு முடிவுகள் சரியில்லை. இதனால் இன்போசிஸ் பங்குகள் விலை இன்று மோசமாகச் சரிந்தது” எனத் தெரிவித்தார்

click me!