
இந்தியாவில் கோடைகாலம் வெளுத்துவாங்கி வரும் நிலையில், காய்கறிகளும்,பழங்கள் விலையும் சேர்ந்து மக்களை வாட்டி எடுக்கின்றன. எலுமிச்சம் பழம் விலை கிலோ ரூ.200க்கு அதிகரித்துள்ளது.
எலுமிச்சம் பழம் விலை
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் எலுமிச்சம்பழம் கிலோ ரூ200வரை விற்பனையாகிறது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பணவீக்கத்தால் சாமானிய மக்கள் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும்நிலையில், எலுமிச்சம்பழம் விலை மேலும் கசக்கிப்பிழிகிறது.
எலுமிச்சம்பழம் விலை மட்டுமல்ல காய்கறிகள், உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பால்விலை, சிஎன்சி விலை, வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை, அத்தியாவசியப் பொருட்கள் விலை ஆகியவை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏறிக்கொண்டே வருகின்றன. பணவீக்க உயர்வுக்கு நடுத்தர மக்களும், சாமானியர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்
கிலோ ரூ.200
ராஜ்கோட் நகர சந்தையில் வாடிக்கையாளர் ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ எலுமிச்சம் பழம் விலை கிலோ ரூ.200 ஆக உயர்ந்துவிட்டது, இதற்கு முன் ரூ.50 முதல் 60 வரைதான் இருந்தது. இதுபோன்ற விலை உயர்வு எங்களின் பட்ஜெட்டை பதம்பார்க்கும்.எப்போது இந்த விலைவாசி குறையும் என எனக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்
எகிறும் விலைவாசி
கிரிஷி ஜாக்ரன் சமீபத்தில் அளித்த அறிக்கையில் “ பச்சைமிளகாய், பீன்ஸ், பூண்டு, காலிபிளவர், கொத்தமல்லி ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. கொத்தமில்லி, சீரகம், பச்சைமிளகாய் விலை கடந்தசிலநாட்களில் 40 முதல் 60 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது.
கொத்தமல்லி இதற்கு முன் கிலோ ரூ.50 முதல் 60ஆக இருந்தது, தற்போது கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் கிலோ ரூ.160க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் கிலோ ரூ.120ஆகவும், காலிபிளவர் ஒன்று ரூ.40ஆக கடந்த பிப்ரவரி மாதம் இருந்தது, கடந்த மார்ச் இறுதியில் ஒரு காலிபிளவர் ரூ.80ஆக உயர்ந்துவிட்டது.
பால் விலை
காய்கறிகளின் விலைவாசி உயர்ந்துவரும் அதே நேரத்தில் பால்விலையும் உயர்ந்து வருகிறது. பிப்ரவரி 28ம் தேதி அமுல் நிறுவனம் பால்விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது.
அடுத்த சில நாட்களில் மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது.பிப்ரவரி மாதம் மொத்த விலை பணவீக்கம் 13.11 சதவீதம் இருந்தது, இதற்கு காரணமாக கச்சா எண்ணெய்விலை உயர்வு கூறப்பட்டது. ஆனால், தொடரந்து 11-வது மாதமாக மொத்தவிலைப்பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே இருப்பதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணமாகக் கூறமுடியுமா.
பணவீக்கம் உயர்வு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணவீக்கம் 4.83 சதவீதமாக இருந்தது, ஆனால், 2022 மார்ச் மாதம், 12.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணவீக்கம் அதிகரிப்புக்கு மத்தியவர்த்தகத்துறை அமைச்சம் கடந்த மாதம் வெளியி்ட அறிக்கையில் “ 2022, பணவீக்கம் அதிகரித்தமைக்கு, தூதுஎண்ணெய், உலோகவிலை, ரசாயனம், ரசானயப் பொருட்கள் விலை, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவிலை, உணவுப் பொருட்கள் விலை, உணவுப்பொருட்கள் சாராதவை அனைத்தும் விலை ஆகியவைதான் காரணம்” எனத் தெரிவித்தது
காரணம் என்ன
ஆனால், சாமானியர்கள், நடுத்தர மக்கள் அன்றாடம்பயன்படுத்தும் காய்கறிகள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள்விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம் போக்குவரத்து செலவு அதிகரிப்புதான்.கடந்த 12 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.20 அதிகரித்துள்ளது. போக்குவரத்து செலவு அதிகரிக்கும்போது, அதன் சுமை இறுதியாக மக்களின் மீதுதான் விழும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.