india australia trade: 95% பொருட்களுக்கு வரிவிலக்கு: இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒப்பந்தம் கையொப்பம்

Published : Apr 02, 2022, 01:21 PM IST
india australia trade: 95%  பொருட்களுக்கு வரிவிலக்கு: இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒப்பந்தம் கையொப்பம்

சுருக்கம்

india australia trade: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பமானது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 95சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறது ஆஸ்திரேலியா. குறிப்பாக ஜவுளிகள், தோல்பொருட்கள், தங்க நகைகள், விளையாட்டு சாதனங்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

கையொப்பம்

இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலும், ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீ்ட்டுத்துறை அமைச்சர் டான் தேஹனும் காணொலி மூலம் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதாரக் கூட்டுறவுமற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. 

உணர்வுப்பூர்வமானது

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர்மோடி கூறுகையில் “ இந்தியா-ஆஸ்திரேலியா நட்புறவில் இந்த வர்த்தக ஒப்பந்தம் உண்மையில் உணர்வுப்பூர்வமானது” எனத் தெரிவித்தார்

நட்பு விரிவடையும்

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் கூறுகையில் “இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடனான நட்புறவு ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் ஆழமாகும்” எனத் தெரிவித்தார்

வர்த்தகம் அதிகரி்க்கும்

மத்தி வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில் “ இரு நாடுகளுக்கு இடையே தற்போது ஆண்டுக்கு 2700 கோடி டாலர் வர்த்தகம் நடக்கிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில்  4500 முதல் 5000 கோடி டாலராக அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் கையொப்பமான நாளில் இருந்து இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 96.4% பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கும். தற்போது இந்தியப் பொருட்களுக்கு 4 முதல் 5 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டு வருகிறது. அது இனிமேல் இருக்காது” எனத் தெரிவித்தார்

ஏற்றுமதி இறக்குமதி

இதனால், ஜவுளத்துறை, ஆயத்த ஆடைத் தொழில், வேளாண் பொருட்கள், மீன் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், வீ்ட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், நகைகள், எந்திரங்கள், மின்னணுபொருட்கள், ரயில் பெட்டிகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு வரி இருக்காது. 

இந்தியாவுடன் ஆஸ்திரேலியா செய்யும் 17-வது வர்த்தக ஒப்பந்தமாகும்.  இந்தியாவுக்கான 9-வது மிகப்பெரிய பார்ட்னர் ஆஸ்திரேலியா. 2021ம் ஆண்டில் இருநாடுகளுக்கு இடையிலான பொருட்கள் மற்றும் சேவை பரிவர்த்தனை மட்டும் 2750 கோடிடாலராக இருந்தது.

இறக்குமதி அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து கடந்த 2021ம் ஆண்டில் 690 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. ஆனால், 1510 கோடிக்கு  இறக்குமதி நடந்துள்ளது.இந்தியாவிலிருந்து அதிகமாக பெட்ரோலியம் பொருட்கள், ஜவுளிகள், ஆயத்தஆடைகள், எந்திரங்கள், தோல் பொருட்கள், ரசாயனங்கள், விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலிருந்து கச்சா பொருட்கள், நிலக்கரி, தாதுக்கள் உள்ளிட்டவே இறக்குமதியாகின்றன

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!