covaxin vaccince: குறையும் கொரோனா ! கோவாக்ஸின் தடூப்பூசி தயாரிப்பை குறைக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்

Published : Apr 02, 2022, 11:53 AM IST
covaxin vaccince: குறையும் கொரோனா ! கோவாக்ஸின் தடூப்பூசி தயாரிப்பை குறைக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்

சுருக்கம்

covaxin vaccince :நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவருவதையடுத்து, தேவையும் குறைந்துவருவதால்,  கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தயாரிப்பை படிப்படியாகக் குறைக்க இருப்தாக பாரத் பயோடெக் நிறுழனம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவருவதையடுத்து, தேவையும் குறைந்துவருவதால்,  கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தயாரிப்பை படிப்படியாகக் குறைக்க இருப்தாக பாரத் பயோடெக் நிறுழனம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கோரப்பட்டிருந்த ஆர்டருக்கான சப்ளையும் ஏறக்குறைய முடிந்துவிட்டதால், தடுப்பூசி  தயாரிப்பை குறைக்க இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வசதிகள் மேம்பாடு

பாரத் பயோடெக் நிறுவனம் இனிவரும் நாட்களில் மருந்து தயாரிப்பு வசதிகளை அதிகப்படுத்துதல், பராமரிப்பு, நவீன வசதிகளை உண்டாக்குதலில் கவனம் செலுத்த இருக்கிறது. 

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் குழுவினர் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வந்து பார்வையிட்டு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மக்களின் தேவை, பொதுநலன் ஆகியவற்றுக்காக தொடர்ந்து மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஆதலால், ஏற்கெனவே இருக்கும் வசதிகள் மறுகட்டமைப்பு செய்யப்படும். 

பாதுகாப்பு முக்கியம்

சிறந்த பாதுகாப்பு மற்றும் திறன்செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் உலகளவில் உருவாகும் தேவைகளை நிறைவேற்றவும் தேவையான அளவு உற்பத்தியில் ஈடுபடும். எந்த புதியதடுப்பூசியிலும் நோயாளியின் பாதுகாப்பு மிக அவசியம். இதில் எந்தவிதமான சமசரத்துக்கும் வாய்பில்லை.

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு எங்கள் நிறுவனத்தை ஆய்வு செய்தபோது, எந்தவிதமான மாற்றங்களையும்எங்கள் புள்ளிவிவரங்களில் கண்டறியவில்லை. அதில் தடுப்பூசி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது, பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டதில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

தேவையை நிறைவேற்றுவோம்

இதுவரை லட்சக்கணக்காண மக்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும், பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை. கிளினிக்கல் பரிசோதனைக்காகவே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 10விதமான கிளினிக்கல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன, 15 விதமான ஆய்வு நிறுவனங்கள் முடிவுகளை வெளியிட்டன. 

இருப்பினும் பாரத் பயோடெக் நிறுவனம் தன்னை மேம்படுத்திக்கொண்டு, தரம் உயர்த்தி தொடர்ந்து கோவாக்ஸின் தடுப்பூசி உற்பத்தி செய்து உலகளவிலான தேவையை நிறைவேற்றும் 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது

கடந்த டிசம்பர் மாதம் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், தனது கோவிஷீல்ட் தயாரிப்பை பாதியாகக் குறைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!