தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நகை விற்பனையை ஊக்குவிக்க நகைக் கடைகள் கார், ஐபோன் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளன. தந்தேராஸ் மற்றும் தீபாவளி விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தங்க நகை விற்பனை சிறிய நகரங்களில் குறைந்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது. நடுத்தர மற்றும் பாமர மக்களின் தங்க நகை ஆசைக்கு தங்கம் விலை சமாதி கட்டியுள்ளது. தங்கம் அணிவது வாழ்வாதாரம் இல்லை என்றாலும் தங்கம் அணிவதை பெண்கள் விரும்புவதால் நாளுக்கு நாள் இதன் விலையும் அதிகரித்து வருகிறது. இதை ஒரு முதலீடாகவும் நடுத்தர வர்க்கத்தினர் கருதுகின்றனர்.
தங்க நகைகளின் விலை அதிகரித்து வருவதால், வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று கூறுவதற்கில்லை. ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ப நகைகளை வாங்கி வருகின்றனர். தங்க நகை விற்பனை குறைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் சில நகைக் கடையினர் ஐபோன், கார் ஆகியவற்றை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.
நடப்பாண்டில் 'தந்தேராஸ் 2024'-ல் தங்க நகை மற்றும் வைர விற்பனை சுமார் 15-20 சதவீதம் குறைந்துள்ளது. பத்து கிராம் தங்கத்தின் விலை நடப்பாண்டில் தந்தேராஸின் போது 81,000 ஆக இருந்தது. சில்லறை விற்பனையாளர்களான சென்கோ தங்க நகை மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் ஆகியவற்றின் விற்பனை சிறிய நகரங்களில் குறைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தந்தேராஸ் மற்றும் தீபாவளி சமயங்களில் தங்க மற்றும் வைர நகை விற்பனை 30-40 அதிகரித்து காணப்படும். ஆனால், இந்த முறை சிறிய நகரங்களில் விற்பனை பெரிய அளவில் பாதித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் மற்றும் நகை பிரியர்களை ஈர்ப்பதற்கு என்று சென்கோ தங்க மற்றும் வைர நகை, ஜோஸ் ஆலூக்காஸ், மலபார் கோல்டு ஆகியவை எலட்ரிக் கார், எஸ்யுவி, ஐபோன், தங்க காசு ஆகியவற்றை தேர்வு முறையில் அறிவித்துள்ளனர். அதாவது நகை வாங்குவர்களுக்கு குலுக்கல் தேர்வில் இவை வழங்கப்படும். இவை போக தங்க நகைகளின் மீது சில நகைக் கடைகள் தள்ளுபடி அறிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ. 80,593 ஆக உள்ளது. குறையாமல் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், ஓடிஸா ஆகிய மாநிலங்கள்தான் மொத்தமாக நாடு முழுவதும் சேர்ந்து 60 சதவீத தங்க நகை விற்பனையை கொண்டுள்ளன. அதாவது இந்த மாநிலங்களின் ஒவ்வொரு ஆண்டு தங்க நுகர்வு 800-850 டன் தங்கம் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தீபாவளி சமயத்தில் தங்க நகை விலை அதிகரித்து இருந்தாலும், இந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைவில்லை என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, நகை நுகர்வு மற்றும் தங்கத்தில் முதலீடு செப்டம்பர் காலாண்டில் 18 சதவீதம் அதிகரித்து 248.3 டன்னாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிஷ்க்கில் நகை வாங்குபவர்களுக்கு தங்க நகைகள் மீது அல்லது வைர நகைகளின் டிசைன் மேக்கிங்கில் 20% வரை தள்ளுபடியைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் தனிஷ்கின் இணையதளத்திலும் நகைக் கடையிலும் நவம்பர் 3, 2024 வரை செல்லுபடியாகும்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது நகை மீது தள்ளுபடி அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பிரீமியம் வாங்குவதற்கும் விலை குறைப்பதற்கும் வழி வகுக்கிறது. பிரீமியம் தங்க நகைகளுக்கான கட்டணத்தில் 30% தள்ளுபடியும், பழங்கால நகைகளுக்கான கட்டணத்தில் 40% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கல்யாண் ஜூவல்லர்ஸ் மேக் செய்த நகையாக இருக்க வேண்டும். சாதாரண தங்க நகைகளுக்கான மேக்கிங் கட்டணத்தில் 30-50% தள்ளுபடியும் அறிவித்துள்ளது.