
படித்து முடித்த ஏராளமான இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில்லை என பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் நிலவுகின்றன. இதற்கு காரணம் இளைஞர் இளைஞிகளிடம் ஏராளமான ஆசை மற்றும் கனவுக்கோட்டை கட்டிவைத்துள்ளனர். படித்த ஆண்கள் குறைந்த பட்ச படிப்பை முடித்த பெண்களை தேடுவதும், படித்த பெண்கள் அதிகம் சம்பாதிக்கும் ஆண்களை தேடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், Shadi.com என்ற மேட்ரிமோனி வெப்சைட் "India's Most Eligible" என்ற தலைப்பில் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருமான விகிதாச்சார அடிப்படையில் ஆண்களை, பெண்கள் தேர்வு செய்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மாதம் 2.25 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் ஆண்களை (ஆண்டுக்கு 30 லட்சம்) சுமார் 192% திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். மாற்று கோணத்தில் பார்த்தால், ஆண்டுக்கு 30 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் பெண்களை, 17 சதவீத ஆண்கள் மட்டுமே திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாதம் 1.25 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் ஆண்களை, 130 சதவீத பெண்களும், ஆண்டுக்கு 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை வாங்கும் பெண்களை 27சதவீத ஆண்களும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுக்கு 10 -15 லட்சம் சம்பாதிக்கும் ஆண்களை திருமணம் செய்ய 62 சதவீத பெண்களும், 10 முதல் 15 லட்சம் வரை சம்பாதிக்கும் பெண்களை திருமணம் செய்ய 15 சதவீத ஆண்களும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் ஜோஷி ராஜினாமா!!
ஆண்டுக்கு 7 முதல் 10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் திருமணம் செய்ய 7 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு 4 முதல் 7 லட்சம் சம்பாதிக்கும் ஆண்களை -25 சதவீதம் பெண்கள் என நெகட்டிவ் அளவில் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆண்களோ 6% திருமணத்திற்கு ஓகே என்ற அளவில் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் கீழே சம்பாதிக்கும் ஆண்களை திருமணம் செய்ய நினைக்கும் பெண்களின் விகிதம் -65 சதவீதமாக சரிந்துள்ளது. இதன் மூலம் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள், மாதம் 30,000 வாங்கும் ஆண்களை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என தெரிவிக்கின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.