
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் பயன்பாட்டுக்கு புதிதாக 2,210 விமானங்கள் தேவைப்படும். இதில் 80 சதவீதம் சிறிய விமானங்களாகத்தான் இருக்கும் என்று ஏர்பஸ் நிறுவனம் கணித்துள்ளது.
2022ம் ஆண்டில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறை வளர்ச்சி குறித்து ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏர்பஸ் இந்தியாவின் தெற்காசியப் பிரிவின் சந்தைப்பிரிவு தலைவர் பிரன்ட் மெக்பிராட்னே பங்கேற்றார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து 2040ம் ஆண்டில் 6.2% அளவுக்கு ஆண்டுக்கு வளர்ச்சி இருக்கும். உலகின் வேகமாகவளரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடாக இந்தியா இருக்கும்.
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2,210 புதியவிமானங்கள் தேவைப்படும். இதில் 1770 விமானங்கள் புதிய சிறியவிமானங்களாக இருக்கும், 440 விமானங்கள் நடுத்தரமானதாகவும், பெரிய விமானங்களாகவும் இருக்கும். 2038ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு 1,880 பயணிகள் விமானங்கள், கார்கோ விமானங்கள் தேவைப்படும் என்று முன்பு கணித்திருந்தோம். ஆனால், பொருளாதார வளர்ச்சி காரணமாக மேலும் அதிகரி்க்கும்.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ச்சி முக்கியக்காரணம். இந்தியாவில் உள்நாட்டில் இயக்கப்படும் விமான நிறுவனங்கள் வெளிநாட்டில் தங்கள் பயணத்தை தொடங்க இது சரியான காலம். இதனால்இந்தியாவுக்கு 2040ம் ஆண்டில் 34ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கல், 45 ஆயிரம் விமான தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவார்கள்”
இவ்வாறு பிரன்ட் மெக்பிராட்னே தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.