rbi:இதை மட்டும் செய்யாதிங்க! ஆன்-லைன் மோசடி குறித்து ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டிவிதிகள் வெளியீடு

Published : Mar 25, 2022, 01:10 PM ISTUpdated : Mar 25, 2022, 01:11 PM IST
rbi:இதை மட்டும் செய்யாதிங்க! ஆன்-லைன் மோசடி குறித்து ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டிவிதிகள் வெளியீடு

சுருக்கம்

rbi: ஆன்-லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துவரும் சூழலில் ஏமாற்று வேலைகளும், மோசடி செயல்களும் சீராக உயர்ந்து வருகின்றன. அதிலும் கொரோனா காலத்தில் நேரடியாக எங்கும் செல்ல முடியாத சூழலைப் பயன்படுத்தி, ஆன்லைனில் ஏராளமான மோசடிகள் நடந்து,பலருடைய பணம் பறிக்கப்பட்டுள்ளது, ஏராளமானோர் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.

ஆன்-லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துவரும் சூழலில் ஏமாற்று வேலைகளும், மோசடி செயல்களும் சீராக உயர்ந்து வருகின்றன. அதிலும் கொரோனா காலத்தில் நேரடியாக எங்கும் செல்ல முடியாத சூழலைப் பயன்படுத்தி, ஆன்லைனில் ஏராளமான மோசடிகள் நடந்து,பலருடைய பணம் பறிக்கப்பட்டுள்ளது, ஏராளமானோர் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.


தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும்போது அதற்கு ஏற்றார்போல் மோசடி வேலையில் ஈடுபடுவோரும் புதிய யுத்திகளைக் கையாண்டு மோசடி வேலையில் ஈடுபட்டு பணம் ஈட்டுகிறார்கள். இதைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி “BE(A)WARE)” எனும் பாதுகாப்பு வழிகாட்டி கையேட்டே மக்களுக்காக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மோசடி லிங்க்

  • தெரியாத செல்போன் எண், உறுதி செய்யப்படாத எண்ணிலிருந்துவரும் எஸ்எம்எஸ், மின்அஞ்சல் ஆகியவற்றில் இருக்கும் லிங்க்குளை தொடக்கூடாது. அதை க்ளிக் செய்யாமல் உடனடியாக அழித்துவிட வேண்டும்
  • அந்த மின்அஞ்சல் வந்த முகவரியை பிளாக் செய்ய வேண்டும், எஸ்எம்எஸ் மூலம்வந்திருந்தாலும் அதையும் பிளாக் செய்ய வேண்டும்.
  • வங்கிப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால், முறைப்படி வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று பணம் அனுப்பலாம்.
  • வங்கியின்இணையதளத்தை அணுகும்போதுகூட யுஆர்எல் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • யுஆர்எல் மற்றும் டொமைன் பெயர்களை மின்அஞ்சலில் சரிபார்க்க வேண்டும். 

சந்தேகத்துக்குரிய கால்கள்

  • மோசடியாளர்கள் நேரடியாக செல்போன் அழைப்புகள், சமூக ஊடகங்கள், வங்கி முகவர்கள், காப்பீடு முகவர்கள், அரசு அதிகாரிகள் என யாருடை முகத்திரையை அணிந்தாவது வந்து ஏமாற்ற முடியும். வாடிக்கையாளர்களின் பிறந்த தேதி,வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை கேட்டு பெற முயற்சிப்பார்கள்.
  • உண்மை நிலவரத்தின்படி, வங்கி அதிகாரிகள், நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, என யாருமே வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களான யூசர்நேம், பாஸ்வேர்டு, கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு விவரங்கள், ஓடிபி ஆகியவற்றைக் கேட்கமாட்டார்கள். 
  • இந்த விவரங்களை ஒருபோதும் யாரிடமும் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. குடும்பஉறுப்பின்களிடம்கூட இந்த பாஸ்வேர்டை பகிரக்கூடாது.

ஆன்லைன் விற்பனை

  • ஆன்-லைனில் பொருட்களை விற்கும் தளத்தின் மூலம்கூட மோசடியாளர்கள் வர முடியும என்பதை ஆன்லைன் பயன்படுத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும்
  • ஆன்-லைன் தளத்தில் பொருட்களை வாங்கும்போதும், விற்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்
  • ஒன்றுமட்டும் புரிந்துகொள்ள வேண்டும் பணத்தை அணுப்புவதற்கு மட்டுமே பாஸ்வேர்டு தேவை, பணத்தை பெறுவதற்கு பாஸ்வேர்டு தேவையில்லை.
  • நாம் பயன்படுத்தும் யுபிஐ  அல்லது ஏதாவது ஆப்ஸ் பரிவர்த்தனைக்கு பின் நம்பர் கேட்டால், அது பணம் அனுப்புவதற்குமட்டும்தான். பணம் பெறுவதற்காகஅல்ல.

தெரியாத, உறுதிசெய்யப்படாத செயலிகள்

  • மோசடியாளர்கள், எஸ்எம்எஸ், மின்அஞ்சல், சமூக ஊடகம், மெசஞ்சர் ஆகியவை மூலம் சில குறிப்பிட்ட லிங்குகளை அனுப்பி, போலியான பிரபல செயலிகள் போல் அனுப்புவார்கள்.
  • அங்கீகரி்க்கப்படாத, பாதுகாக்கப்படாத செயலிகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யக்கூடாது.
  • பதவிறக்கம் செய்யும் போது, அதன் உரிமையாளர்கள் யார், பதிப்பாளர்கள் விவரம், இந்த செயலிக்கான ரேட்டிங் ஆகியவற்றை கண்காணிப்பது அவசியம்

ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஸ்

  • மோசடியாளர்கள் சில நேரங்களில் ஸ்க்ரீன்ஷேரிங் செயலிகளை அனுப்பி ஆசைகாட்டி பதிவிறக்கம் செய்யக் கூறுவார்கள். 
  • உங்கள் மொபைல் போனில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு, புதிதாக ஏதாவது ஆப்ஸ் உள்ளேவந்துள்ளதாக உணர்ந்தால், உடனடியாக அனைத்து பேமெண்ட் செயலிகளையும் லாக்அவுட் செய்துவிட வேண்டும்.
  • ஸ்க்ரீன் ஷேரிங் செயலியை ஏதாவது பணிகாரணமாக பதிவிறக்கம் செய்ய வேண்டியது இருந்தால், அந்தப்பணி முடிந்தபின், அந்த செயலியை உடனடியாக மொபைல் போனிலிருந்து நீக்கிவிட வேண்டும். 

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

  •  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!