பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா 1.9 ட்ரில்லியன் டாலர் ஜிடிபியுடன் உலகின் 10வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய சந்தை விலையில் 1.9 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன், உலகின் 10வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தது.
இன்று, கோவிட்-19 தொற்று, சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் கடந்து இப்போது 3.7 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன் இந்தியா 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்தப் 10 ஆண்டுகாலப் பயணம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குக் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது" என்றும் கூறியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
12 லட்சம் சம்பாதிச்சாலும் வருமான வரியே கட்ட வேண்டாம்! இந்த ஐடியாவைத் தெரிஞ்சுக்கோங்க!
"2047ஆம் ஆண்டிற்குள் இந்தியா 'வளர்ந்த நாடாக' மாறுவதற்கான உயர் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. சீர்திருத்தங்களின் பயணம் தொடர்வதால், இந்த இலக்கை நிச்சயம் அடைய முடியும்" என்றும் நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மாநில அரசுகளின் முழுப் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்தும் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.
சீர்திருத்தங்கள் மாவட்ட, தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் நிர்வாகத்தில் மாற்றங்களை உள்ளடக்கியிருக்கும்போது, குடிமக்களுக்கு இணக்கமானதாகவும் சிறு தொழில்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். சுகாதாரம், கல்வி, நிலம் மற்றும் தொழிலாளர் போன்ற துறைகளிலும் மாநிலங்களின் பங்கேற்பு பெரிய பங்கு வகிக்க வேண்டும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
"உள்நாட்டு தேவையின் வலிமை கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 7% வளர்ச்சி விகிதத்திற்கு உயர்த்தியுள்ளது... 2025 நிதியாண்டிலும் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதத்துக்கு அருகில் இருக்கும்" என்றும் அறிக்கை கூறுகிறது. வரும் 2030க்குள் வளர்ச்சி விகிதம் 7%க்கு மேல் உயர கணிசமான வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது.
நிதித் துறையின் வலிமை மற்றும் பிற கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 7% க்கும் அதிகமான விகிதத்தில் வளர்ச்சியடைவதற்கு மிக அதிக சாத்தியம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. புவிசார் அரசியல் மட்டுமே கவலைக்குரிய ஆபத்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய EV ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 25 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் சுவிஸ் நிறுவனம்