
இந்திய அஞ்சலகம் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய சுய தொழிலை வழங்குகிறது. இந்தத் திட்டம் பற்றி இந்த செய்தித்தொகுப்பு விளக்குகிறது.
மக்கள் தங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பாக சேமிக்கவும், நல்ல லாபம் பெறவும் அஞ்சலம் பல அருமையான திட்டங்களை அறிவித்து வருகிறது. அதுபோன்ற திட்டங்கள் மக்களிடையே மிகப் பிரபலம். ஆனால், இளைஞர்களுக்கு சொந்தமாக வியாபாரம் தொடங்க அஞ்சல்துறை வாய்ப்பு அளிப்பது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதிலும் பெரிதாக முதலீடு ஏதும் தேவையில்லை. குறைந்தபட்சமாக ரூ5 ஆயிரம் முதலீடு செய்தால்போதுமானது. கடினமாக உழைத்தால் நல்ல ஊதியம்கிடைக்கும். அஞ்சலகத்தின் பிரதிநிதியாவதன் மூலம் மாதந்தோறும் நல்ல லாபம் ஈட்டலாம்.
அஞ்சலக முகவர் திட்டம்
இந்தியாவில் 1.56 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. என்னதான் செல்போன், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை வந்தாலும் தபால்சேவைக்கு இன்னும் மவுசு குறைவில்லை.அதிகாரபூர்வ ஆவணங்கள், கடிதங்கள், அரசு கடிதங்கள் போன்றவை இன்னும் தபால் மூலமே அனுப்பப்படுகின்றன.
இந்த அஞ்சலகத்தில் முகவராகச் சேர்வதன் மூலம் சுயதொழில் செய்யலாம். அஞ்சலகம் இருவிதமான வாய்ப்புகளை வழங்குகிறது. முதலாவது அஞ்சலகம் ஒரு இடத்துக்கு தேவைப்படும் ஆனால், அங்கு கிளை அமைக்க முடியாது. அந்த இடத்தில் முகவராகச் சேர்ந்து கிளை தொடங்கும் வாய்ப்பு. 2-வதாக தனிநபர்கள் போஸ்டல் ஏஜென்டாக இருந்து, தபால்தலை உள்ளிட்ட அஞ்சலப் பொருட்களை கிராமங்கள், நகர்ப்புறங்களில் விற்பனை செய்வதாகும். இதற்குகுறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதலீடு இருந்தாலே போதுமானது
தகுதி என்ன
வருமானம் எவ்வளவு கிடைக்கும்
அஞ்சல முகவராக வரும் தனிநபர்கள், நிறுவனங்கள் கமிஷன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
1. பதிவுத் தபால் செய்தால் ஒரு பரிமாற்றத்துக்கு ரூ.3 கமிஷன் கிடைக்கும்
2. விரைவுத் தபால் புக் செய்தால், பரிமாற்றத்துக்கு ரூ.5 கமிஷன் கிடைக்கும்
3. மணிஆர்டர் செய்தால், ரூ.100க்கு ரூ.3.50 கமிஷனும், ரூ.200க்கு மேல் ரூ.5 கமிஷனும் கிடைக்கும். ரூ.100க்கு குறைந்து மணிஆர்டர் வாங்கக்கூடாது.
4. மாதத்துக்கு 100 பதிவுத் தபால் செய்துவிட்டால், கூடுதலாக 20% கமிஷன் கிடைக்கும்.
5. அஞ்சல் தலை, கவர்கள், கார்டுகள் உள்ளி்ட்ட ஸ்டேஷனரி பொருட்களை விற்பதன் மூலம் 5 சதவீதம் கமிஷன் பெறலாம்.
6. ரெவன்யூ ஸ்டாம்ப் உள்ளிட்டவற்றை விற்றால், 40% கமிஷனும் கிடைக்கும்
7. விரைவு பார்சல் ரூ.5லட்சம் வரை புக் செய்தால் 10% கமிஷனும், பதிவுப் பார்சல் புக் செய்தால் 7% கமிஷனும் கிடைக்கும்
8. ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.2.50 லட்சம் வரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 15 சதவீதம் கமிஷனும், பதிவுத் தபால் புக் செய்தால், 10% கமிஷனும் கிடைக்கும்.
9. ரூ.25 லட்சத்துக்கு மேல் ரூ.ஒரு கோடிவரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 20% கமிஷனும், பதிவுத் தபால் புக் செய்தால் 13 % கமிஷனும் கிடைக்கும்.
10. ஒரு கோடி முதல் ரூ.5 கோடிவரை ஸ்பீட் பார்சலுக்கு 25% கமிஷனும், பதிவுத் தபாலுக்கு 16% கமிஷனும் கிடைக்கும்.
11. ரூ.5 கோடிக்கு மேல் விரைவு பார்சலுக்கு 30% கமிஷனும், பதிவுத் தபாலுக்கு 20% கமிஷனும் கிடைக்கும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது
1. எந்த இடத்தில் அஞ்சலக் கிளையை தொடங்கப் போகிறோம் என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
2. தபால்நிலையத்தில் இதற்கான விண்ணப்பத்தைப் பெற்று, அதை பூர்த்தி செய்து, திட்டஅறிக்கையை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்
3. அஞ்சல்துறையும், முகவராக வருவோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவேண்டும்.
4. விண்ணப்பத்தைஅளித்தபின், விண்ணப்பதாரரை தேர்வு செய்வது, மண்டலத் தலைவர் அதிகாரத்துக்கு உட்பட்டது. விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து 14 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.