இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் இணையப் பொருளாதாரத்தின் பங்களிப்பு 2030ஆம் ஆண்டளவில் 48 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவின் இணையப் பொருளாதாரம் 2022ல் 175 பில்லியன் டாலரிலிருந்து 2030க்குள் 1 டிரில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று செவ்வாயன்று ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
கூகுள், டெமாசெக் மற்றும் பெயின் அண்டு கம்பெனி ஆகிய நிறுவனங்களால் வெளியிடப்பட்ட 'தி இ-கானமி ஆஃப் எ பில்லியன் கனெக்டட் இந்தியன்ஸ்' (The e-Conomy of a Billion Connected Indians) என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, இரண்டாம் நிலை நகரங்களில் இணைய பயன்பாடு அதிகரிப்பு, டிஜிட்டல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பொதுத்துறை டிஜிட்டல் முயற்சிகள் ஆகிய மூன்று முக்கிய சக்திகளின் வெற்றி இந்தியாவின் இணையப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியுள்ளன.
"டிஜிட்டல் பயன்பாடு அதிகரிப்பு, வணிக நிறுவனங்களின் தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் ஆகிய மூன்று அடிப்படை சக்திகள் இந்தியாவை அதன் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு திருப்புமுனையில் வைத்துள்ளன" என்று இந்தியாவுக்கான கூகுள் நிறுவன தலைவர் சஞ்சய் குப்தா கூறியுள்ளார்.
பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வரும் ChatGPT நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்!
இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் இணையப் பொருளாதாரத்தின் பங்களிப்பு 2030ஆம் ஆண்டளவில் 48 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 4-5 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 12-13 சதவீதமாக உயரும் என்று அறிக்கை கூறுகிறது.
10 முக்கிய நுகர்வோர் துறைகளில் 2030ஆம் ஆண்டின் கண்ணோட்டத்தை முன்வைத்து, B2C இ-காமர்ஸ் டிஜிட்டல் சேவைகள் 2030க்குள் ஐந்தாறு மடங்கு அதிகரித்து 350 முதல் 380 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் அறிக்கை கணித்துள்ளது.
"இந்தியாவின் இணையப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் 6 மடங்கு வளர்ச்சியை அடையக்கூடும். B2C இ-காமர்ஸ் 40 சதவீதமாக உள்ளது" என்று பெயின் அண்டு கம்பெனி (Bain and Company) நிறுவனத்தைச் சேர்ந்த பாரிஜாத் கோஷ் சொல்கிறார்.
திருடுவதைப் பார்த்த சிறுமி... இரக்கமின்றி கொலை செய்துவிட்டு அப்பாவி போல் நாடகம் ஆடிய இளைஞர்!
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை 2030க்குள் இரட்டிப்பாகும். அதிகமான ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிறிய நகரங்களில் வசிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் சலுகைகளால் அவர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவின் 700 மில்லியன் இணையப் பயனர்கள் அதிகப் பணப் பரிவர்த்தனை செய்கின்றனர். ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் சமூக ஊடகங்களில் உலகளாவிய சராசரியைக் காட்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதனால் இணையப் பொருளாதாரம் இன்னும் விரிவடையும்.
35 பைசாவுக்கு ரயில்வே காப்பீடு எடுத்தால் ரூ.10 லட்சம்! விண்ணப்பித்துப் பெறுவது எப்படி?