India Inflation: நாட்டிலேயே தமிழகம், கேரளவில் தான் பணவீக்கம் குறைவு..! மற்ற மாநிலங்களில் மிரட்டும் விலைவாசி..!

By Pothy RajFirst Published May 17, 2022, 1:47 PM IST
Highlights

india inflation : ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் அல்லது நுர்வோர் விலை பணவீக்கம் 26 மாநிலங்ககளில் 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 5.50 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் அல்லது நுர்வோர் விலை பணவீக்கம் 26 மாநிலங்ககளில் 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 5.50 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பணவீக்க இலக்கு

நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி வைக்க ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது. ஆனால், 2022 ஜனவரி முதல் பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது, மார்ச் மாதம் சில்லரை பணவீக்கம் 6.95 சதவீதமாகவும், ஏப்ரலில் 7.79 சதவீதமாகவும் அதிகரித்தது.

தொடர்ந்து 4-வது மாதமாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிடக் கடந்தது. 
இதையடுத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரஅவசரமாக கடந்த வாரம் கூடிய ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை 40 புள்ளிகள் உயர்த்தியது.

கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ரெப்போ ரேட்டை உயர்த்தாமல் இருந்த ரிசர்வ் வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, 4.40 சதவீதமாக வட்டிவீதம் அதிகரித்தது. 

தமிழகம் கேரளா

இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் 74 சதவீத மாநிலங்கள்அதாவது 26 மாநிலங்களில் சில்லரை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. தமிழகம், கேரளா, கோவா, மணிப்பூரில் மட்டும்தான் பணவீக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாகவும், கேரளாவில் 5.1 சதவீதமாகவும் இருக்கிறது. 

இதில் கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் வளர்ச்சி அடையாத மாநிலங்கள், இதில் கோவா யூனியன் பிரதேசம், மணிப்பூர் வடகிழக்கு மாநிலம்.

இரு மாநிலங்களிலும் மக்கள் அடர்த்தி குறைவு என்பதால், பணப்புழக்கம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசால் எளிதாக முடியும். ஆனால், தமிழகம், கேரளா ஆகியஇரு மாநிலங்களுமே வளர்ந்த மாநிலங்கள், கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடு இருக்கும் மாநிலங்கள் இந்த மாநிலங்கள் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது

பணவீக்கம் அதிகம்

குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உ.பி. மே.வங்கம் போன்ற மாநிலங்கள் தொழிலில், முதலீட்டில் நன்கு வளர்ந்த மாநிலங்கள். அந்த மாநிலங்களில் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. ஆனால், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசு பணவீக்கத்தை கட்டுக்குள்வைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் சில்லரைப் பணவீக்கம் தொடர்ந்து 5-வது மாதமாக 5 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. ஹரியானாவில் தொடர்ந்து 6-வது மாதமாக, பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மேற்கு இ்ந்தியாவில் தாத்ரா நாகர் ஹாவேலியில் தொடர்ந்து 9-வது மாதமாகபணவீக்கம் 6 சதவீதத்தை கடந்துள்ளது. இந்தியாவில் எந்த மண்டலத்திலும் இல்லாத வகையில் இங்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தில்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.12 சதவீதம் பணவீக்கம் இருக்கிறது, அதைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்தியப்பிரதசேதத்தில் 9.10 சதவீதம், தெலங்கானாவில் 9 சதவீதம் பணவீக்கம் நிலவுகிறது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மிகக்குறைவாக 2.29 சதவீதமாகவும், கோவாவில் ஏப்ரல் மாதத்தில் 4.01 சதவீதமாகவும் பணவீக்கம் நிலவுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல், விலை உயர்வுதான் பணவீக்கத்தை தூண்டிவிடுவதற்கு முக்கியமான காரணியாகும். பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, மற்ற பொருட்களின் விலையும் தானாகவே உயர்ந்துவிடும்.

தென் மாநிலங்களில் தெலங்கானாவில் சாராசரி சில்லரைப் பணவீக்கம் தொடர்ந்து 6வது மாதமாக 6.2 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.வடகிழக்கு மாநிலமான மிசோரத்திலும் பணவீக்கம் 6.2 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

ரிசர்வ் வங்கி தோல்வி

 நாட்டின் 4 மண்டலங்களிலும் தொடர்ந்து 3 காலாண்டுகளாக சில்லரைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேல் இருந்து வருகிறது. 2021-ஜூலை-செப்டம்பர் முதல் தொடர்ந்து 3 காலாண்டுகளாக தாத்ரா நாகர் ஹாவேலி, சிக்கிம், தெலங்கானா, ஜம்மு காஷ்மீரில் பணவீக்கம் 6.5 சதவீதத்துக்கு மேல் இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் சில்லரைப் பணவீ்க்கம் 5 சதவீததத்தும் மேல் அதாவது 5.1 சதவீதம், 5 சதவீதம், 6.3 சதவீதமாக உயர்ந்து வருகிறது. நாட்டின் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க இலக்கு வைத்துள்ள ரிசர்வ் வங்கியால் இது முடியவில்லை. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது. இந்த பணவீக்க உயர்வு என்பது ரிசர்வ் வங்கியின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது

click me!