
UPI Lite New Update: இந்தியால டிஜிட்டல் பேமெண்ட் இன்னும் ஈஸியாக்குறதுக்கு NPCI (National Payments Corporation of India) UPI லைட்ல நிறைய பெரிய மாற்றங்கள் பண்ணியிருக்காங்க.
இனி UPI லைட் யூஸர்ஸ் அவங்க அக்கவுண்ட்ல மிச்சம் இருக்கிற பணத்தை திரும்ப பேங்க் அக்கவுண்ட்டுக்கே மாத்திக்கலாம். அதுக்கு UPI லைட்டை டிசேபிள் பண்ண தேவையில்லை. இதனால சின்ன சின்ன பேமெண்ட்ஸை மேனேஜ் பண்றது இன்னும் ஈஸியாகும்.
| RBI டிசம்பர் 4, 2024 நோட்டிபிகேஷன் படி, UPI லைட்டுக்கான புது லிமிட்ஸ் இதோ: | |
| ஒரு பரிவர்த்தனை லிமிட் | ₹500 (முன்னர் ₹100) |
| புது மேக்ஸ் பரிவர்த்தனை லிமிட் | ₹1,000 |
| மொத்த பேலன்ஸ் லிமிட் | ₹5,000 |
ஒரு UPI லைட் அக்கவுண்ட்ல 6 மாசத்துக்கு எந்த பரிவர்த்தனையும் நடக்கலைன்னா, அந்த அக்கவுண்ட்டை பேங்க் யூஸ் பண்ணாத அக்கவுண்ட்டா நினைச்சுக்கிட்டு, அதுல இருக்கிற பணத்தை யூஸரோட பேங்க் அக்கவுண்ட்டுக்கே திரும்ப அனுப்பிடும். இந்த ரூல்ஸை ஜூன் 30, 2025க்குள்ள அமல்படுத்தணும்.
Step 1: உங்களுக்கு பிடிச்ச UPI லைட் ஆப் (Google Pay, PhonePe, Paytm மாதிரி) ஓபன் பண்ணுங்க.
Step 2: UPI லைட் செக்ஷன்ல பேமெண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
Step 3: பணம் வாங்குறவங்களோட UPI ID போடுங்க இல்ல QR கோடை ஸ்கேன் பண்ணுங்க.
Step 4: ₹500 வரைக்கும் எவ்வளவு அனுப்பணுமோ அதை போடுங்க.
Step 5: PIN எதுவும் போடாம உடனே பேமெண்ட்டை முடிங்க.
இதுவும் படிங்க:
வெறும் 11 ரூபாய்க்கு விமான டிக்கெட்.. வெளிநாட்டை சுற்றிப் பார்க்க செம சான்ஸ்!
பேமிலி டிராவல் + பாதுகாப்பு நிச்சயம்.. பட்ஜெட்டில் கிடைக்கும் தரமான கார்கள்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.