வருமான வரி கணக்கு தாக்கல் செஞ்சுட்டீங்களா...? இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா?

By manimegalai aFirst Published Aug 31, 2018, 12:49 PM IST
Highlights

மாத சம்பளம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்து வருமானம் பெறுவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

மாத சம்பளம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்து வருமானம் பெறுவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர வருமானம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய,  கடந்த ஜூலை 31 கடைசி நாளாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் படிவம் தாமதம், வரிப்பிடித்தம் (டி.டி.எஸ்.) குறித்த தகவலை இணையதளத்தில் பதிவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால், கடந்த நிதியாண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, ஆகஸ்ட் 31 (இன்று) வரை, மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்திருந்தது. 

அதன்படி இன்று கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். செலுத்த தவறினால், மொத்த ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.

அதேபோல், ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக ரூ.5,000; மார்ச் 31 வரை ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 

click me!