எனது 3-வது பதவிக்காலத்தில், இந்தியா 3-வது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் : பிரதமர் மோடி நம்பிக்கை

By Ramya s  |  First Published Jul 30, 2024, 12:58 PM IST

தனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் 2024-25 மாநாட்டிற்குப் பிந்தைய மாநாட்டின்’ தொடக்க அமர்வில் இன்று உரையாற்றினார்.  இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில், தொழில்துறை, அரசு அதிகாரிகள், உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 

வளர்ந்த பாரத்தை நோக்கிய பயணம்: யூனியன் பட்ஜெட் 2024-25 மாநாடு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி “ தொற்றுநோய்களின் போது, எப்படி மீண்டும் வளர்ச்சி அடைவது என்று குறித்து விவாதித்தோம். அப்போது இந்தியா மிக விரைவில் வளர்ச்சிப் பாதையில் ஓடும் என்று நான் சொன்னேன், இன்று இந்தியா 8% வேகத்தில் வளர்ந்து வருகிறது.

Latest Videos

undefined

எஸ்கேப் மூடில் மக்கள்.. தங்கப் பத்திரத் திட்டத்தை தலை முழுகும் மத்திய அரசு.. அப்போ இதுதான் காரணமா?

இன்று, 'வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணம்' பற்றி விவாதிக்கிறோம். இந்த மாற்றம் வெறும் உணர்வுகளால் அல்ல, ஆனால் நம்பிக்கையால் ஏற்பட்டது. இன்று, இந்தியா உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்தியா உலகின் 3 வது பெரிய பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய் அவர் “ உலகளாவிய பொருளாதார சூழல் மோசமாக இருந்தாலும், உலகிலேயே இந்தியா மட்டுமே 'அதிக வளர்ச்சி அடைந்த நாகாக திகழ்கிறது. மேலும் குறைந்த பணவீக்கம்' நாடாகவும் உள்ளது. இந்தியாவின் நிதிசார் மதிநுட்பம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. தொழில் வளர்ச்சி 4.0 ஐ மனதில் வைத்து திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், மேக் இன் இந்தியா, விக்சித் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். வளர்ந்த பாரதம் திட்டத்தின் இலக்கை நிறைவேற்ற தொழில்துறையினர் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். சிறுகுறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பட்ஜெட்டில் பேசி உள்ளோம். இந்த நிறுவனங்களின் சுமையைக் குறைக்கவும், முறைப்படுத்தலுக்கு உதவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று இந்தியாவில் 1.40 லட்சம் ஸ்டார்ட்அப்கள் உள்ளன, 8 கோடி பேர் முத்ரா கடனுடன் தங்கள் தொழிலைத் தொடங்கியுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய பிரதமர் “ கடலோர சுரங்கத் தொகுதிகளுக்கான முதல் கட்ட ஏலத்தை விரைவில் தொடங்குவோம். சூரிய உதயத் துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகிறது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்கிறோம். க்ரீன் ஹைட்ரஜன், மின் வாகனங்கள் போன்ற மேலும் துறைகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்..” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “ சிறிய அணு உலைகள் அமைக்கும் நடவடிக்கைகளால் தொழில்துறைக்கு பலன் கிடைக்கும். சூரிய உதயத் துறைகளில் இந்தியாவை உலகளாவிய முன்னணி நாடாக மாற்ற தொழில்துறை உதவும். இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு செல்வத்தை உருவாக்குபவர்கள் உந்து சக்தியாக உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

ரூ. 5 லட்சம் வரை வரி விலக்கு.. அதிக வட்டி.. இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகைகளா?

மேலும் “ இன்று உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் மட்டுமின்றி, இந்தியாவின் நோக்கங்கள் மற்றும் முதலீடு ஆகியவை முழு உலகத்திற்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். உலகம் இன்று இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறது, உலகத் தலைவர்கள் இந்தியாவில் ஆர்வமாக உள்ளனர். இது இந்திய தொழில்துறைக்கு ஒரு பொன்னான வாய்ப்பு, இந்த வாய்ப்பை நாம் இழக்கக்கூடாது. முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு மாநிலமும் முதலீட்டாளர் நட்பு சாசனத்தை உருவாக்க வேண்டும். முதலீட்டை ஈர்ப்பதில் எந்த மாநிலமும் பின்தங்குவதை விரும்பவில்லை. முதலீடுகளுக்கு சிறந்த சூழல் உருவாக வேண்டும்," என்று என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​நமது 100வது ஆண்டை விக்சித் பாரதமாக கொண்டாடுவோம் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

click me!