TATA AIR INDIA: ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?டாடா ஏர் இந்தியாவின் சிஇஓ பதவியை ஏற்க இல்கர் ஐஸி மறுப்பு

Published : Mar 01, 2022, 02:24 PM ISTUpdated : Mar 01, 2022, 02:26 PM IST
TATA AIR INDIA: ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?டாடா ஏர் இந்தியாவின் சிஇஓ பதவியை ஏற்க இல்கர் ஐஸி மறுப்பு

சுருக்கம்

டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐஸி அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐஸி அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏர் இந்தியா நிறுவனம் கடனில் தத்தளித்து வந்தநிலையில் அதன்பங்குகளை விற்பனை செய்ய கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு முயன்றது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஷ் பிரைவேட் லிமிடெட் ரூ.18 ஆயிரம் கோடிக்கு விலைக்கு கேட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், 8-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும் முறைப்படி, டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஏற்கெனவே பரிமாற்றம் செய்துவிட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 27ம்தேதி ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய நிர்வாக இயக்குநராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் துருக்கி ஏர்லைஸ் முன்னாள் மேலாண் இயக்குநர் இல்கர் ஐஸி கடந்த மாதம் 14ம் தேதி நியமிக்கப்பட்டார். ஏர் இந்தியாவின் சிஇஓவாகவும், மேலாண் இயக்குநராகவும் ஐஸி நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஏர்இந்தியா இயக்குநராக துருக்கி நாட்டவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதில் “ ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இல்கர் ஐஸிக்கு தேசத்தின் பாதுகாப்பு கருதி  மத்திய அரசுஒப்புதல் வழங்கிடக்கூடாது “ எனத் தெரிவித்தது.

எஸ்ஜேஎம் நிறுவனர் அஸ்வானி மகாஜன் கூறுகையில் “ தேசத்தின் பாதுகாப்பில் ஏற்கெனவே மத்தியஅரசு தீவிரமாக இருக்கும், இப்போது இந்த விஷயத்தையும் கவனமாகவே கையாளும். நாங்கள் நியமிக்கப்பட்டவருக்கு எதிராக இல்லை. தேசத்தின் பாதுகாப்பை மட்டுமே சுட்டிக்காட்டினோம். அனைத்து முடிவுகளும், ஒருவரின் உறவுகள் அடிப்படையில்தா எடுக்கப்படுகிறது “எனத் தெரிவித்திருந்தார்

கடந்த 1971ம் ஆண்டு இஸ்தான்புல் நகரில் இல்கர் ஐஸி பிறந்தார். 1994ம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம் பயின்ற ஐஸி, அரசியல்அறிவியல் பாடத்தில் பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் 1995-ம் ஆண்டு ஆய்வுப்பணியை முடித்தார். 1997ம் ஆண்டு இஸ்தான்புல்நகரில் உள்ள மர்மராபல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலைப்படிப்பையும் ஐஸி முடித்தார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!