உமங் ஆப் மூலம் PF அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!

By SG Balan  |  First Published Aug 12, 2024, 3:55 PM IST

உங்கள் PF பணத்தை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கும் வசதியை UMANG செயலி வழங்குகிறது.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) உறுப்பினர்கள் தங்கள் இ-நாமினேஷனை முடித்தவுடன் தங்கள் பி.எஃப். கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும். முன்பணம் பெறுவது, ஓய்வூதியக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பது ஆகியவை மூலமும் பணத்தை எடுக்க வாய்ப்பு உள்ளது.

ஆன்லைனில் பி.எஃப். பணத்தை எடுக்க இரண்டு எளிமையான வழிகள் உள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ உமங் (UMANG) ஆப் மூலமாகவே ஆன்லைனில் பி.எஃப். பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக உமங் செயலி மூலம் இது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

பி.எஃப். கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு குறிப்பிட்ட தகுதி மற்றும் விதிமுறைகள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவை பூர்த்தி செய்யப்பட்டால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். UMANG செயலியை பயன்படுத்தி உறுப்பினர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் இருந்தே தங்கள் PF கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

UMANG ஆப் மூலம் PF பணத்தைப் பெறுவதற்கான கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்காணிப்பதும் ஈசி. உமங் செயலியில் "EPFO" பகுதிக்குச் சென்று, உங்கள் கோரிக்கையின் நிலையை அறியலாம்.

பெண்களுக்கு மட்டும் இந்த சூப்பர் திட்டம்! வெறும் 1000 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

UMANG மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி?

> கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து UMANG செயலியை டவுன்லோட் செய்யவும். அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, லாக்-இன் செய்து உள்ளே நுழையவும். பின் Services பிரிவில் EPFO என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

> அடுத்து, ‘Employee Centric Services’ பகுதிக்குச் சென்று, “Raise Claim” என்பதை கிளிக் செய்யவும். பின், UAN எண்ணை டைப் செய்யவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

> OTP ஐ டைப் பதிவுசெய்த பிறகு நீங்கள் எடுக்க விரும்பும் தொகை மற்றும் உங்கள் வங்கிக் கணக்குத் விவரம் போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும்.

> இந்தச் செயல்முறையை முடித்தவுடன், உங்கள் கோரிக்கைக்கான எண் (reference number) கிடைக்கும். உங்கள் கோரிக்கையின் நிலையை அறிய இந்த எண்ணை பயன்படுத்தலாம்.

UMANG செயலியில் PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?

> உங்கள் UMANG செயலியைத் திறந்து EPFO ​​பகுதிக்குச் செல்லவும்.

> அடுத்து, ‘Employee Centric Services’ பகுதிக்குச் சென்று, ‘View Passbook’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

> உங்கள் UAN எண்ணை டைப் செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ அதற்குரிய இடத்தில் டைப் செய்து சமர்ப்பிக்கவும். 

> OTP ஐ பதிவுசெய்தவுடன் உங்கள் பி.எஃப். கணக்கில் இருக்கும் பேலன்ஸ் தொகையைத் திரையில் பார்க்கலாம்.

பிரசவத்துக்கு வந்த கர்ப்பணியின் வயிற்றில் துண்டை வைத்துத் தைத்த டாக்டர்கள்!

click me!