
How to earn 20 lakhs Rupees: உங்கள் தொழில் வாழ்க்கையின் முதல் வருடத்தில் 20 லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது உங்கள் குறிக்கோளா? சிலர் இதை கடினம் என்று கூறுவார்கள். ஆனால், லட்சியம் கொண்டவர்கள் கடினமாக இருந்தாலும் சாத்தியமில்லை என்று எதுவுமில்லை என்று கூறுகிறார்கள். தொழில் வாழ்க்கையின் முதல் வருடத்தில் 20 லட்சம் உங்களுடையதாக வேண்டுமென்றால் திட்டமிடல், திறன் மேம்பாடு மற்றும் அர்ப்பணிப்பு (Quires Strategic Planning, Skill Development, and Dedication) தேவை. இந்த இலக்கை அடைய என்னென்ன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், அவற்றை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
AI/ML: அதிக சம்பளம் தரும் வேலை வேண்டுமென்றால் சில திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தற்போது பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் படிப்புகளை (Artificial Intelligence and Machine Learning) படித்திருக்க வேண்டும்.
Cybersecurity: இது டிஜிட்டல் யுகம் என்பதால், அதற்கு தொடர்புடைய Security analysis, Penetration testing, Incident response போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
Product Strategy:தயாரிப்பு மேம்பாடு, மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
Web Development: ஜாவாஸ்கிரிப்ட், பைதான் அல்லது ரூபி போன்ற வலை வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நிரலாக்க மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Content Creation: எழுதுதல், வீடியோ தயாரிப்பு அல்லது கிராஃபிக் வடிவமைப்பு திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Software Development: Upwork அல்லது Fiverr போன்ற பல்வேறு தளங்களில் பணிபுரிந்தால் அதிக சம்பளம் கிடைக்கும். இந்தப் பதவிகளில் சாத்தியமான வருமானம் வருடத்திற்கு ₹1.1 லட்சம் முதல் ₹9.0 லட்சம் வரை இருக்கும்.
Content Writing: வணிகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களுக்கு உயர்தர உள்ளடக்கத்தை எழுதிக் கொடுக்கலாம். இந்த வேலைக்கு வருடத்திற்கு ₹2.59 லட்சம் சம்பளம் கிடைக்கும்.
Online Tutoring: ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதன் மூலம் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கு மணிக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
Digital Marketing: SEO, சமூக ஊடக மேலாண்மை மற்றும் Affiliate marketing போன்ற வேலைகளை பகுதி நேரமாக செய்து மாதத்திற்கு ₹30,000 முதல் ₹2,00,000 வரை சம்பாதிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் அல்லது முதலாளிகளை ஈர்க்க உங்கள் திறன்கள் மற்றும் திட்ட விவரங்களைக் கொண்ட போர்ட்ஃபோலியோவை (Build a strong portfolio) உருவாக்க வேண்டும். சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற உங்கள் தொழில்முறை நெட்வொர்க்கை (professional network) விரிவுபடுத்த வேண்டும். தொடர்ந்து கற்றுக்கொண்டு, தொழில் போக்குகள் மற்றும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கிய வேலையுடன் கூடுதலாக பகுதி நேர வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டி அனுபவத்தைப் (income and gain experience) பெற வேண்டும். ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்து உங்கள் திறமைகளை (Share your expertise) மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறந்த படிப்புகள் Best Courses
கூடுதல் உத்திகள்-Additional Strategies
தயாரிப்புகளை திறம்பட விளம்பரப்படுத்துவதன் (Affiliate marketing) மூலம் மாதத்திற்கு ₹25,000 முதல் ₹2,00,000 வரை சம்பாதிக்கலாம். இ-காமர்ஸ் தளங்களைப் (Selling online products) பயன்படுத்தி உங்கள் சொந்த பொருட்களை விற்பனை செய்து மாதத்திற்கு ₹50,000 முதல் ₹3,00,000 வரை சம்பாதிக்கலாம். YouTube அல்லது வலைப்பதிவு (YouTube or blogging) மூலம் இன்று மக்கள் மாதத்திற்கு ₹50,000 முதல் ₹5,00,000 வரை சம்பாதிக்கிறார்கள்.
தேவைப்படும் திறன்களில் கவனம் செலுத்துவதன் மூலம், வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதன் மூலம், தொழில்முனைவோர் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தொழில் வாழ்க்கையின் முதல் வருடத்தில் ₹20 லட்சம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.