பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!

Published : Jun 28, 2023, 04:41 PM ISTUpdated : Jun 28, 2023, 04:48 PM IST
பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!

சுருக்கம்

பான் கார்டில் பெயரை மாற்றுவதற்கான செயல்முறையை வருமான வரித்துறை எளிமையாக்கியுள்ளது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளலாம்.

பான் கார்டு என்பது இந்திய குடிமக்களுக்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தக்கூடியது. அதில் பெயர் தவறாக இருந்தால் அதை மாற்றி, சரியான பெயருடன் பான் கார்டு வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

பான் கார்டில் பெயரை மாற்ற பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு பெயர் எழுத்துப் பிழையுடன் இருக்கக்கூடும், சிலருக்கு இன்ஷியல் தவறாகப் போடப்பட்டிருக்கும், சிலருக்கு பான் கார்டில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தாமல் இருக்கும். திருமணத்தின் போது பெயரை மாற்றிக்கொண்டாலும், பான் கார்டில் பெயரை மாற்ற அவசியம் ஏற்படும்.

பென்ஷன் தொகையை அதிகரிக்க மற்றொரு வாய்ப்பு! காலக்கெடுவை நீட்டித்து EPFO அறிவிப்பு

இவ்வாறு பல காரணங்களை முன்னிட்டு பான் கார்டில் பெயரை மாற்றுவதற்கான செயல்முறையை வருமான வரித்துறை எளிமையாக்கியுள்ளது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே தங்கள் பெயர்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஆன்லைனில் பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி, அதற்கு ஆகும் கட்டடணம் எவ்வளவு, தேவையான ஆவணங்கள் எவை என்பன குறித்துப் பார்க்கலாம்.

UTIITSL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, PAN Card Services என்பதற்குக் கீழ் உள்ள Change/Correction in PAN Card என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து தோன்றும் மெனுவில், Apply for Change/Correction in PAN Card Details என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் பான் கார்டு அஞ்சலில் பெற வேண்டும் என்றால் Physical என்பதைத் தேர்வு செய்யலாம். Digital என்பதைத் தேர்வு செய்தால் டிஜிட்டல் பான் கார்டு பெறலாம். எளிதாக புதிய பான் கார்ட்டை பெற டிஜிட்டல் பான் கார்டை தேர்வு செய்யலாம்.

திடீர் பயணமா? இந்த வழியில் புக் செய்தால் ரயில் டிக்கெட் கிடைப்பது உறுதி! முழு விவரம் இதோ...

இப்போது தோன்றும் மெனுவில் ஆதார் e-KYC என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் தானாகவே ஆதார் அடிப்படையிலான eSign பயன்படுத்தப்படும். பின், உங்கள் பான் எண்ணை அதற்கான இடத்தில் டைப் செய்து, டிஜிட்டல் பான் கார்டு தவிர தபாலிலும் பான் கார்டு அனுப்பிவைக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர் Submit என்பதைக் கிளிக் செய்யவும்.

மற்ற தேவையான அனைத்து தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தவும்.  உங்கள் UIDAI பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குச் சென்றால் விண்ணப்பித்தில் அளிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்த்துவிட்டு, சமர்ப்பிக்கலாம்.

சுவிட்சர்லாந்தில், உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கிய இந்திய குடும்பம்.. தலைசுற்ற வைக்கும் விலை!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?