எந்த திட்டத்தில் அதிக வட்டி..! சிறு சேமிப்பில் அசத்தல் திட்டம் எது ?

 
Published : Oct 04, 2017, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
எந்த திட்டத்தில் அதிக வட்டி..! சிறு சேமிப்பில் அசத்தல் திட்டம் எது ?

சுருக்கம்

how much interest for new plans in post office

சிறுசேமிப்புகளுக்கு  கூடுதல் வட்டி 

சிக்கனமாய் வாழனும் ,சேர்த்து வைக்க பழகணும் என்ற பாடலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்பது பெரியவர்கள் இளைஞர்களுக்கு சொல்லும் சிறந்த அறிவுரையாகும்.உதாரணத்திற்கு எறும்பு கூட கோடைகாலத்தில் உணவை சேமித்து வைத்து,குளிர்காலத்தில் போது பயன்படுத்தும்.அது போல நமது முதுமையில் துன்பம் படாமலிருக்க  இளமையில்  சேமிப்பது நமக்கு நன்மை தரும்.

ஆனால் பொதுமக்களோ நம்பிக்கைக்குரிய சேமிப்புகளில் பணம் போடாமல்,அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சில போலி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமார்ந்து விடுகின்றனர்.பொதுமக்கள் நம்பிக்கைக்குரிய சேமிப்புகள் எதுவென்றால்,வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள்.அவற்றிலும் அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு  திட்டங்களுக்கு பெரிதும் வரவேற்பு இருக்கின்றது.தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ,ஆண்டுதோறும் சிறுசேமிப்பு கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருந்தாலும் அவற்றின் வட்டிவிகிதம் மாறாமல் இருப்பதே வேதனை அளிக்கிறது அவற்றை பற்றி விரிவாக பாப்ப்போம்

ஆரம்ப காலகட்டத்தில் சிறுசேமிப்புவட்டி விகிதம் அதிகமாக இருந்ததாலும்,பின்னர்  வட்டி விகிதத்தில்   சில  மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும்  சொல்லப்போனால் வட்டி  விகிதங்கள்  குறைத்துவிட்டனர் என்றே  கூறலாம். இருப்பினும் வங்கிகளில்  கிடைக்கும்  வட்டியை  விட , இது  போன்ற  சிறு  சேமிப்பில்  கிடைக்கும்  வட்டி அதிகமாகத்தான்  இருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த  வகையில், தற்போது நடைமுறையில் உள்ள சிறுசேமிப்பு திட்டத்தில், எந்த பிரிவினருக்கு எவ்வளவு வட்டி என்பதை  பார்க்கலாம்   

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும்  சிறுசேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் எண்ணிக்கை அதிகர்த்துக்கொண்ட உள்ளது, இதனை தொடர்ந்து கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.20 ,737 கோடியே 29 லட்சம் வசூலாகியுள்ளது.

தற்போதைய விதிப்படி 2  காலாண்டுக்கு .1 % குறைக்கப்பட்ட நிலையில், அக்டோபர்  முதல்  டிசம்பர்  வரையுள்ள காலாண்டில் எந்த ஒரு வட்டிவிகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதயை நிலவரப்படி  எந்தெந்த பிரிவில் வட்டி விகிதம் பிரிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான  வட்டி  விகிதத்தையும் பார்ப்போம்

*வருங்கால வைப்பு நிதிக்காக -7 .8 %

* மூத்தகுடிமக்களுக்காக  (5  ஆண்டு )சேமிப்பு திட்டத்திற்கு - 8 .3 %

*கிசான் விகாஸ் பத்திரத்திற்கு- 7 .5  %

*தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு -7 .8 %

*அஞ்சலக மாதாந்திர வருவாய்  திட்டத்திற்கு -7 .5 %

*தொடர் வைப்பு நிதிக்கு           -  7 .1 %

*செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு -8 .3 %

*சேமிப்பு நிதிக்கு 4 % வட்டி வழங்கபடுகிறது

*கடந்த 2016 -2017 ஆண்டுகளை ஒப்பிடுகையில் பெருமளவில் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

பெருகி வரும் விலை வாசியை கருத்தில் கொண்டும் ,நடுத்தரமக்களின் வாழ்க்கையை மனதில் கொண்டும் வட்டியை மேலும் குறைக்காமல் கூடுதல் வட்டி அளிப்பது  இவர்களுக்கு பயனளிப்பதோடு மட்டும் அல்லாமல் மூத்தகுடிமக்களுக்கும் பெரும்பயனளிக்கும்.இது எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கும் அனைவரின் கோரிக்கையாகக்கூட  எடுத்துக்கொள்ளலாம்.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?