HITS கல்வி நிறுவனத்தின் கொரோனா வாரியர் வார்டுகள் தத்தெடுப்பு திட்டம்..! பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்

By karthikeyan VFirst Published Jul 17, 2020, 12:52 AM IST
Highlights

ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்(Hindustan Institute of Technology and Science - HITS), இந்தியாவின் முன்னணி பல்கலைகளில் ஒன்று. ஹிந்துஸ்தான் கல்விக்குழுமம் சார்பில், கொரோனா போர்வீரர் வார்டுகளை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
 

ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்(Hindustan Institute of Technology and Science - HITS), இந்தியாவின் முன்னணி பல்கலைகளில் ஒன்று. ஹிந்துஸ்தான் கல்விக்குழுமம் சார்பில், கொரோனா போர்வீரர் வார்டுகளை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், கொரோனாவை எதிர்கொள்ள களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி, கொரோனாவிலிருந்து உயிர்களை காத்த கொரோனா போர்வீரர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் சலுகைகளை அனுபவிக்கும் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், கல்வி கட்டணம் முழுவதுமாக கூட தள்ளுபடி செய்யப்படும்.

தனித்துவமான திட்டம் ஒன்று உள்ளது. அதன்படி, மாணவர்களின் படிப்புச்செலவு, தங்கும் செலவு ஆகியவற்றையும் ஏற்றுக்கொண்டு, அதுபோக மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். ஆனால் இந்த உதவித்தொகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலில், கொரோனாவை கண்டு அஞ்சி நடுங்காமல், துணிச்சலுடன் ஒற்றுமையாக இணைந்து கொரோனாவிடமிருந்து நாட்டை காக்க, தன்னலமற்ற மகத்தான சேவையை செய்துவரும் கொரோனா போர்வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஹிந்துஸ்தான் கல்விக்குழும நிறுவனர் தலைவர் டாக்டர்.கே.சி.ஜி.வெர்கீஸ் பெருந்தன்மையுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இதுதவிர, கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் - ஊழியர்கள் ஆகியோருக்கான உதவித்தொகை திட்டத்தையும் HITS அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்துவிதமான கல்விப்பிரிவுகளுக்கும் சேர்த்து 2 ஆண்டு காலத்தில் மொத்தம் 100 உதவித்தொகைகள் வழங்கப்படும். டாக்டர்.கே.சி.ஜி.வெர்கீஸ் உதவித்தொகை திட்டத்தின் கீழும் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் உதவித்தொகை, 3 விதமான பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 1) மெரிட் உதவித்தொகை - 12ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் HITS நுழைவுத்தேர்வு(HITSEEE) மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.  2) Merit Cum Means உதவித்தொகை - பொருளாதார ரீதியாக பின் தங்கிய/மாற்றுத்திறனாளி/முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய மாணவர்களுக்கு வழங்கப்படும்.  3) விளையாட்டு மற்றும் கலாச்சார உதவித்தொகை - மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் சாதித்த அல்லது சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை. 

1985ம் ஆண்டு நிறுவப்பட்ட HITS பல்கலைக்கழகமாக வளர்ந்து பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டிடக்கலை, பயன்பாட்டு அறிவியல், டிசைன், சுகாதார அறிவியல் மற்றும் சட்டம் ஆகிய பல பாடப்பிரிவுகளில் டிப்ளோமா, இளநிலை மற்றும் முதுநிலை கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 18,000க்கும் அதிகமான மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்துவரும் புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் கல்விக்குழுமத்தின் ஒரு அங்கம் தான் HITS.

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் கவுன்சில்(என்.ஏ.ஏ.சி) HITS-க்கு “ஏ” கிரேடு வழங்கியுள்ளது. தேசிய அங்கீகார போர்டு(NBA-National Board of Accreditation), 5 பி.டெக் பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசியளவில் பொறியியல் கல்வி தரத்தில் 107வது ரேங்க்கையும், கட்டிடக்கலை படிப்பில் 20வது ரேங்க்கையும் பெற்றுள்ளது. 

2020-2021 கல்வியாண்டில் HITS-ல் பி.டெக், பி.ஆர்க்(B.Arch) மற்றும் B.Des ஆகிய படிப்புகளில் சேர HITSEEE என்ற ஆன்லைன் நுழைவுத்தேர்வு, ஆகஸ்ட் 5 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கவுள்ளது. நுழைவுத்தேர்வு, கவுன்சிலிங் ஆகிய அனைத்துமே ஆன்லைனிலேயே நடைபெறும். அதனால் மாணவர்கள் கடினமில்லாமல், வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைனில் எழுதமுடியும். கொரோனா அச்சுறுத்தலால் நிறைய பல்கலைக்கழகங்கள் நுழைவுத்தேர்வை ரத்து செய்தாலும், HITS இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் நுழைவுத்தேர்வை நடத்துகிறது.

HITS-ல் சேருவதற்காக, கடந்த ஆண்டு(2019) நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை 30 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31.  ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் www.hindustanuniv.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஆன்லைன் நுழைவுத்தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அமையும். 

எரிசக்தி, சைபர் செக்யூரிட்டி, ஏவியானிக்ஸ் மற்றும் Artificial Intelligence & Machine ஆகிய பிரத்யேக பொறியியல் பாடப்பிரிவுகளை HITS வழங்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளுக்கு திறமையான பொறியாளர்களையும் பணியாளர்களையும் உருவாக்கி கொடுப்பதில் HITS  கவனம் செலுத்துகிறது.

கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களை www.hindustanuniv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
 

click me!