2025 முதல் வாழ்நாள் ஊதியத் திட்டம்! குறைந்தபட்ச ஊதிய முறைக்கு குட்பை சொல்லும் மத்திய அரசு!

By SG Balan  |  First Published Mar 25, 2024, 10:16 PM IST

தொழிலாளர்கள் தற்போது பெற்றுவரும் குறைந்தபட்ச ஊதியம் முறைக்கு மாற்றாக வாழ்நாள் ஊதியம் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் வாழ்நாள் ஊதிய முறையை விரைவில் அமல்படுத்தக்கூடும் என்று தெரிகிறது.


2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஐ.நா. சபையின் கீழ் ஐ.எல்.ஓ. என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பை உருவாக்கியுள்ளது. உலக அளவில் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. அண்மையில், ஜெனிவாவில் நடைபெற்ற  இந்த அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஐ.எல்.ஓ. ஒப்புதல் கொடுத்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

அந்த முடிவின்டி தொழிலாளர்கள் தற்போது பெற்றுவரும் குறைந்தபட்ச ஊதியம் முறைக்கு மாற்றாக வாழ்நாள் ஊதியம் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் வாழ்நாள் ஊதிய முறையை விரைவில் அமல்படுத்தக்கூடும் என்று தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் கிடைக்கும் ஜாக்பாட்! முழு விவரம் இதோ!

ஐ.எல்.ஓ.வின் தரவுகளின்படி, இந்தியாவில் சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.176 ஆக உள்ளது. குறைந்தபட்ச ஊதிய முறைக்குப் பதிலாகப் புதிய முறை அமலுக்கு வந்தால், இந்தத் தொகை பல மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான குறியீடு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்படியான ஊதியத் திட்டமாக வாழ்நாள் ஊதியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஐ.எல்.ஓ. இந்தியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 50% ஆக அதிகரித்திருக்கிறது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களிட் அகவிலைப்படியை அதே அளவுக்குக் கூட்டியிருக்கின்றன. இந்நிலையில், மத்திய அரசு வாழ்நாள் ஊதிய முறையைக் கொண்டுவர பரிசீலித்து வருவது கவனிக்கத்தக்கது.

click me!