
ஆதார், மொபைல் எண்ணை மட்டும் பதிவுசெய்து, ரூ. 8 லட்சம் வரை கடன் பெறும் புதிய திட்டத்தை தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
பிஎன்பி இன்ஸ்டா லோன் என்று இந்தத் திட்டத்துக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பிஎன்பி வங்கி ரூ.8 லட்சம் வரைகடன் வழங்குகிறது. வாடிக்கையாளர் ஒருவர் தனிநபர் கடன் பெற விரும்பினால், அவரின் மொபைல் எண், ஆதார் எண்ணை மட்டும் பதிவு செய்தால், அவருக்கு கடன் வழங்கப்படும்.
இந்தத் தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி அதனுடைய அதிகாரப்பூர்வட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க பிஎன்பி வாடிக்கையாளர்கள் பிஎன்பி ஒன்(PNP ONE) என்ற செயலியைப் பயன்படுத்தி அதன் மூலம்தான் விண்ணப்பிக்க முடியும்.
மேலும், கட்டணமில்லா தொலைப்பேசி எண் 18001808888 என்ற எண்ணுக்கும் பேசி வாடிக்கையாளர்கள் பதிவு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறத் தகுதியானவர்கள் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் மட்டும்தான். மேலும் விவரங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி tinyurl.com/t3u6dcnd இணையதளத்தைக் காணலாம்.
பிஎன்பி வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இந்த லிங்கை அதாவது, https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#!இந்த லிங்கில் சென்று, மொபைல் எண், ஆதார் எண்ணை பதிவு செய்து விண்ணப்பிக்க முடியும். பதிவு செய்தபின், வங்கியின் சார்பில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உரிய கடன் வழங்கப்படும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.