
கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று கடுமையாக சரிவைடந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.71,840-க்கும், கிராம் ரூ.8,980-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக கிடுகிடுவென அதிகரித்து வந்த தங்கம் விலை இரண்டு நாட்களுக்கு முன்னர் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. இதனால் இல்லத்தரசிகளும், முதலீட்டாளர்களும், திருமண ஏற்படு செய்து வருபவர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.
சர்வசேத நிலவரங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாறுதல் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்றைய காலை வர்த்தகத்தில் சரசரவென சரிவடைந்தது. இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்து விற்பனையாகிறது. இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இன்று (ஜூன் 7) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.150 அதிரடியாக குறைந்து, ரூ.8,980-க்கும்; சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.117-க்கும், ஒரு கிலோ ரூ.1,17,000-க்கும் விற்பனையாகி வருகிறது. ஒருகிராம் ஆபரணத்தங்கம் விலை மதுரையில் ரூ.8980 கோவையில் ரூ.8992, நெல்லையில் ரூ.8980 ஆகவும் உள்ளது.
இந்தியாவையும் தங்கத்தின் சென்டிமென்டையும் பிரிக்கவே முடியாது என கூறும் சந்தை நிபுணர்கள், தங்கத்தின் விலை உயர்வை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் அறிவுறுத்தியுள்ளனர். முதலீட்டுக்காக அல்லாமல் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு நகைகளை வாங்குவோரும் விலை சரிவை பயன்படுத்திக்கொள்ளலாம் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலாணி தெரிவித்துள்ளார்.
1 கிராம் தங்கம் (22 காரட்) - ரூ.8,980
1 சவரன் தங்கம் (22 காரட்) - ரூ.71,840
1 கிராம் தங்கம் (24 காரட்) - ரூ.9,796
1 சவரன் தங்கம் (24 காரட்) - ரூ.78,368
1 கிராம் வெள்ளி - ரூ.117
1 கிலோ வெள்ளி - ரூ.1,17,000
ஜூன் 7 ரூ.8,980 (-150) ரூ.71,840
ஜூன் 6 ரூ.9,130 (0) ரூ.73,040
ஜூன் 5 ரூ.9,130 (+40) ரூ.73,040
ஜூன் 4 ரூ.9,090 (+10) ரூ.72,720
ஜூன் 3 ரூ.9,080 (+20) ரூ.72,640
ஜூன் 2 ரூ.9,060 (+110) ரூ.72,480
ஜூன் 2 ரூ.8,950 (+30) ரூ.71,600
ஜூன் 1 ரூ.8,920 (0) ரூ.71,360
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.