சர சரவென குறைந்தது தங்கம் விலை..! மக்கள் குஷியோ குஷி..!

Published : Jul 01, 2019, 12:40 PM IST
சர சரவென குறைந்தது தங்கம் விலை..! மக்கள் குஷியோ குஷி..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.குறிப்பாக சென்ற மாதத்தில் பலமுகூர்த்த நாட்கள் இருந்ததால், சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கும் பெண்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். 

சர சரவென குறைந்தது தங்கம் விலை..! மக்கள் குஷியோ குஷி..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக சென்ற மாதத்தில் பலமுகூர்த்த நாட்கள் இருந்ததால், சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கும் பெண்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். 

காரணம் சவரன் விலை.. 26 ஆயிரத்தையம் தாண்டி, 27 ஆயிரம் ரூபாயை தொடும் நிலையில் இருந்தது. இதற்கிடையில், அவ்வப்போது காலை மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை மாறுபாடு இருப்பதால் சில சமயம் மீண்டும் விலை உயர்ந்தும், சில சமயம் குறைந்தும் காணப்பட்டு வந்தது.

இந்த தருணத்தில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று  தங்கத்தின் விலையில் ஓரளவிற்கு சரிவு  ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காலை நேர நிலவரப்படி,

ஒரு கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 3212 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 25 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல், கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 40.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ITR தாக்கல் செய்தீர்களா? டிசம்பர் 31க்குள் இதை செய்யாவிட்டால் அவ்ளோதான்.!
Gold Rate Today (December 20): தங்கம் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க.!