
தொடர் சரிவில் தங்கம் ...!!! சவரன் 21 ஆயிரத்தை நெருங்குகிறது......!!!
தங்கம் விலையில் சில தினங்களாக ஏற்றம் இறக்கம் இருந்தாலும், தற்போது தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கருப்பு பண ஒழிப்பு விவகாரத்தை அடுத்து ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதால், அதன் பின்னர் பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் காட்டிய ஆர்வமும் குறைவாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது , தங்கத்தின் விலையிலும் சரிவு காணப்பட்டு வருகிறது.....
தங்கம் விலை நிலவரம் :
காலை நேர நிலவரப்படி , 22 கேரட் ஒரு கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் குறைந்து, ஆபரண தங்கம் 2 ஆயிரத்து 659 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து , 21 ஆயிரத்து 272 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், 24 கேரட், 10 கிராம் சுத்த தங்கம் 27 ஆயிரத்து 8௦௦ ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி : 41.60 ரூபாயாகவும்
ஒரு கிலோ பார் வெள்ளி 38 ஆயிரத்து 925 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.