அடேங்கப்பா..! குறைஞ்சுடுச்சுடா தங்கம் விலை...!

Published : Aug 23, 2019, 05:24 PM IST
அடேங்கப்பா..! குறைஞ்சுடுச்சுடா தங்கம் விலை...!

சுருக்கம்

தங்கத்தின் மீதான விலை உயர்வு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பட்சத்தில் ஒரு சில நேரங்களில் மட்டும் சிறிய தொகை அளவில் விலை மாற்றம் ஏற்படும் அவ்வளவுதான். 

தங்கம் இறக்குமதிக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்த பட்ட பின்பு வரலாறு காணாத அளவிற்கு ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர்.

தங்கத்தின் மீதான விலை உயர்வு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பட்சத்தில் ஒரு சில நேரங்களில் மட்டும் சிறிய தொகை அளவில் விலை மாற்றம் ஏற்படும் அவ்வளவுதான். இதனைத் தாண்டி ஒரு சவரன் தங்கம் இன்றைய சூழ்நிலையில் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 33 ஆயிரம் ஆகும். காரணம்... செய்கூலி சேதாரம் மற்றும் ஒரு சவரன் ரூபாய் 29,000 என்பதும் கூட...

இந்த நிலையில் தங்கம் வாங்குவதை சற்று குறைக்கலாம் என மக்கள் நினைத்தாலும் சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்ற நிகழ்ச்சிகளில் கௌரவ படுத்துவதற்கும் பரிசுப் பொருளாக தங்கம் கொடுத்து வருவது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக உள்ளது.

எனவே எவ்வளவுதான் தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிலையும் இருக்கின்றது. இருந்தபோதிலும் தொடர் உயர்வைக் கண்டு வரும் தங்கம் விலையால்  பொதுமக்கள் அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து 3621 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் விலை 28 ஆயிரத்து 968 ரூபாய்க்கும் விரிக்கப்பட்டு வந்தது.

மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 3600.00 (-21), சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி ரூ.48.20 ரூபாயாக உள்ளது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!
Gold Rate Today (December 15): ஜோலி முடிஞ்சது..! இனி தங்க நகையெல்லாம் வாங்க முடியாது.! பதறும் நடுத்தர குடும்பங்கள்