மாலை நேரத்தில் மளமளவென குறைந்த தங்கம் விலை ..!

Published : Aug 21, 2019, 05:50 PM IST
மாலை நேரத்தில் மளமளவென குறைந்த தங்கம் விலை ..!

சுருக்கம்

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.

மாலை நேரத்தில் மளமளவென குறைந்த தங்கம் விலை ..! 

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பி இருந்தது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட தங்கம் வாங்குவது என்பது மக்களுக்கு என்றும் அத்தியாவசிய பொருளாக உள்ளது. திருமண நிகழ்ச்சி போன்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது இந்தியர்களின் பழக்கம்.

எனவே எப்போதுமே தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறைய வாய்ப்பே இல்லை என்று கூட கூறலாம். அதே வேளையில் ஒரு பக்கம் தங்கத்தின் மீது விலை உயர்வு கிடு கிடு என உயர்ந்து வருகிறது. அப்படியே விலை குறைந்தாலும் மிக குறைந்த அளவில் தான் குறைகிறது
அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.3601 ரூபாயாக உள்ளது.

அதாவது சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.7 குறைந்து 3594.00 ரூபாயாக உள்ளது. அதாவது சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 752 ரூபாயாக உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா அதிகரித்து 48.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
8வது ஊதியக் கமிஷன்: ரயில்வே ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்