
கடந்த சில வாரங்களாக மெல்ல மெல்ல குறைந்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென பாய்ந்தெழுந்தது. தங்கம் வாங்குவதை திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள், திடீரென கடைக்கு சென்றபோது விலை அதிகரித்திருக்கவே, சிலர் நிலை தவறி மயங்கி விழுந்ததாக செய்திகள் கூறுகின்றன. “கடந்த வாரம் பார்த்தப்போதும் விலை குறைவாக இருந்தது. இன்று வாங்கலாம் என்று நம்பியிருந்தோம். ஆனா கடைக்கு போனதும் விலை எகிறி இருந்தது. ரொம்ப கவலையாக இருக்கு” என பலர் வேதனையை வெளிப்படுத்தினர்.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.9,210-க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு மட்டும் ரூ.480 உயர்ந்து, ரூ.73,680-க்கு விற்பனை ஆகிறது. இந்த திடீர் விலை உயர்வு, பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் மற்றும் மணமக்கள், இந்த விலை உயர்வால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த மாதம் தான் ஹால், கேட்டரிங் எல்லாமே புக்கிங் செய்துவிட்டோம். தங்க நகைக்கு மட்டும் காத்திருந்தோம். இப்போது விலை இப்படிச் செத்தமயிராக உயிந்திருப்பது பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என கூறுகிறார்கள். இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சாதாரண வர்த்தகர்களுக்கும், ஆபரண தயாரிப்பாளர்களுக்கும் கூட ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் இதுதான்.!
தங்கம் விலை ஏன் இவ்வாறு உயர்ந்தது என்ற கேள்விக்குப் பதிலாக, நிபுணர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர்:
இந்த காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றமடைந்துள்ளது. அதன் தாக்கமே இந்தியாவில் பசியூட்டியிருக்கிறது. இதேபோல், வல்லுநர்கள், "தங்கம் விலை இதுவே உச்சம் அல்ல. வர்த்தக நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கியின் முடிவுகளை பொருத்தே வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும்" என எச்சரிக்கின்றனர்.அதனால், தங்கம் வாங்கவிருப்பவர்களும், நகை தயாரிப்பாளர்களும், சந்தையை நன்கு ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும் என்பதே நிபுணர்களின் ஒருமித்த ஆலோசனை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.