
வெயில், மழை, போர் என எந்த சூழலிலும் நகைக்கடை திறந்திருந்தால் அங்கு நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி மஞ்சள் உலோகமான தங்கம் இந்திய மக்களை மட்டுமல்லாமல் உலக மக்களையும் வசீகரித்து வைத்துள்ளது. இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை 70 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ள நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
உலகளவில் தங்கத்தின் தேவை மிக அதிகமாக இருப்பதால் அதன் விலை நாளுக்கு நாள் விலையேற்றத்தை கண்டு வருகிறது. போர், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்கள் அதன் விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. உலக நாடுகள் பல தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் அதன் தேவையும் அதிகமாகியுள்ளது. பொருளாதார வீழ்ச்சி, உள்நாட்டு பிரச்சனை, தீவிரவாத ஆதரவு என பல பிரச்சனைகளை பாகிஸ்தான் தொடர்ந்து சந்தித்து வருகிறது. சீனாவிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது. அதேபோல் நிச்சயமற்ற பொருளாதார காரணங்களால் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் அதளபாதாளம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்துள்ளதால் அந்த நாட்டின் பணவீக்கம் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அன்றாட பயன்பாட்டு பொருட்களான காய்கறி, பழங்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவையும் பாகிஸ்தானில் அதிகரித்துள்ள போதிலும் தங்கம் விலை மட்டும் சரிவடைந்துள்ளது. இந்தியாவை போலவே பாகிஸ்தான் மக்களும் தங்கத்தின் மீது மோகம் கொண்டுள்ளனர். ஆனால் தினந்தோறும் நடைபெறும் விற்பனை இந்தியாவை விட குறைவு என்பதால் அதன் விலை பாகிஸ்தானில் குறைவாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பிரச்சனைகளை மத்தியில் போராடி வரும் பாகிஸ்தானில் 24K தங்கம் ஒரு கிராம் 9135 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவை விட 700 ரூபாய் குறைவாக விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவோ பாகிஸ்தானோ எந்த நாடானாலும் சரி தங்கத்தின் விலை எவ்வளவு ஏற்றம் கண்டாலும் சரி அதன் மவுசு கொஞ்சமும் குறைவதில்லை என்று சொல்லும் பொருளாதார நிபுணர்கள், எப்போதும் இந்தியா பாகிஸ்தான் இடையே தங்கம் விலையில் இதே இடைவெளி இருந்து வருவதாக கூறியுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவில் இன்று மே 27ம் தேதி தங்கத்தின் விலை 24K ஒரு கிராமிக்கு 9813 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் 22K ஒரு கிராமிக்கு 8995 ரூபாய்க்கும், 22K ஒரு கிராமிக்கு 7360 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. சரி, இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமாக இருந்து வருகிறது, நம் அண்டைநாடான பாகிஸ்தானில் ஒரு கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? வாங்க பார்ப்போம்.
மைசூர் பாக்கெல்லாம் MYSORE SRI யாக மாறிவரும் தற்போதைய சூழலில், தற்போது நம்மால் பாகிஸ்தான் செல்ல முடியாது, நிலமை சரியானதுடன் பாகிஸ்தான் சென்று தங்கம் வாங்கிவர திட்டமிடலாம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.