
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் 4900 கோடி டாலராக அதிகரித்து, உலகக் கோடீஸ்வரர்கள் எலான் மஸ்க், ஜெப் பிஜோஸ், பெர்நார்டு அர்னால்டு ஆகியோரையும் முந்தியுள்ளார் என ஹருன் குலோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.
வாரத்துக்கு ரூ.6,000 கோடி
ஆசியாவிலேயே,இந்தியாவிலேயே 2-வது பெரிய கோடீஸ்வரரான அதானியின் சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் 4,900 கோடி டாலர் அதாவது ரூ.3 லட்சத்து 72ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்துள்ளது, வாரத்துக்குரூ.6ஆயிரம் கோடி சொத்து அதானியிடம் சேர்ந்துள்ளது.
ஆசியாவில் முதல் கோடீஸ்வரரும், இந்தியாவின் முதல் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 23% அதிகரித்து 10,300 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அதானியும், அம்பானியும் உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முதலிடத்தை மாறிமாறி நிரப்புகிறார்கள்.
அம்பானி்க்கே ஷாக்
கடந்த 10 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400% அதிகரித்துள்ளதென்றால், அதானி சொத்து மதிப்பு 1830% அதிரித்துள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலசிஸ் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் 3-வது இடத்தில் உள்ளார். 2021ம் ஆண்டில் ஷிவ் நாடார் சொத்து 2,800 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 4-வதாக சீரம் மருந்து நிறுவன அதிபர் ஆதார் பூனாவல்லாவின் சொத்து மதிப்பு 2,600 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 5-வதாக மெட்டல் கிங் லட்சுமி மெட்டல் உள்ளார். இவரின் சொத்துமதிப்பு 2,500 கோடி டாலராகும்.
அதிக ஆதாயம்
கடந்த 2021ம் ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்தவகையில் மிகப்பெரிய லாபமடைந்தவர் கவுதம் அதானிதான். கடந்த ஆண்டில் மட்டும் 4,900 கோடி டாலர் சேர்ந்துள்ளது என்று ஹருன் குலோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி நிகர சொத்துமதிப்பு உலகக் கோடீஸ்வரர்களான ஜெப் பிஜோஸ், எலான் மஸ்க், பெர்நார்டு அர்னால்டு ஆகியோரைவிட அதிகரித்துள்ளது
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தை அதானி தொடங்கியபின் சொத்துமதிப்பு 5 மடங்கு அதிகமாகி, 8100 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆம்டில் 1700 கோடிடாலராகத்தான் அதானின் சொத்து மதிப்பு இருந்தது. 2021ம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 2000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. சொத்து சேர்க்கை தரவரிசை அடிப்படையில் 8-வது இடத்தில் உள்ளார்.
புதிய கோடீஸ்வரர்
நைக்கா நிறுவனத்தின் நிறுவனர் பல்குனி நய்யார் கோடீஸ்வரர்கள் பட்டியலுக்குள்புதிதாக வந்துள்ளார். அவருக்கு 760 கோடி டாலர் சொத்து சேர்ந்துள்ளது. 2022ம் ஆண்டுக்கான ஹருன் குளோபல் ரிச் லிஸ்டில், 69 நாடுகளில் இருந்து, 2,557 நிறுவனங்களில் இருந்து 3,381 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
யுஏஇ ஜிடிபியை விட இருமடங்கு
ஹருன் குளோபல் ரிச்நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் இயக்குநர் அனாஸ் ரஹ்மான் ஜூனைத் கூறுகையில் “
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு 70000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜிடிபிக்கு சமம், ஐக்கியஅரபு அமீரகத்தின் ஜிடிபியைப்போல் இருமடங்கு. உலக மக்கள் தொகையில் 18% இந்தியாவில் இருக்கிறார்கள், இதில் உலகம் அறிந்த கோடீஸ்வரர்கள் மட்டும் 8% இந்தியாவில் உள்ளனர்.
215 கோடீஸ்வரர்கள்
கடந்த5 ஆண்டுக்கு முன் 4.9% மட்டுமே இருந்தனர். சீனாவில் 1,133 கோடீஸ்வர்ரகள் இருக்கும் நிலையில் இந்தியாவில் 215கோடீஸ்வர்கள் உள்ளனர். அமெரிக்காவில் 716 கோடீஸ்வரர்கள் உள்ளனர். 2022ம் ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்த கோடீஸ்வரர்களில் அதானி முலிடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து கூகுளின் லாரி பேஜ் அன்ட் செர்ஜி பிரின், எல்விஎம்ஹெச் நிறுவனர் பெர்னார்டு அர்னால்டு ஆகியோர் உள்ளனர் “ எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.